சென்னை, மே 11 -ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் அனைவரையும் ‘சுகாதார ஆய்வாளர் நிலை 1’ என அறி வித்து ஊதியம் உள்ளிட்ட பலன்களை வழங்க வலியு றுத்தி சென்னையில் இரண்டு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.பணியில் இளையோருக்கு வட்டார சுகாதார மேற்பார் வையாளர் பதவி உயர்வு வழங்கப்பட்ட நாள் முதல், இவர்களுக்கும் அதே போன்ற பதவி உயர்வும், ஊதிய தொடர் பலன்களும் வழங்க வேண்டும் என்றும் இந்த போராட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தின் சார் பில் நடைபெற்ற இந்த போராட்டம் புதன், வியா ழன் ஆகிய இரண்டு நாட்களும் சென்னையில் உள்ள மருத் துவ சேவைகள் இயக்குநரக வளாகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.போஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ச.இ.கண்ணன் தொடங்கி வைத்தார்.சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெ.லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். போராட்டத்தை நிறைவு செய்து அரசு ஊழி யர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச் செல்வி உரையாற்றினார். ஆறு சேகர் நன்றி கூறினார்.கடந்த கால பேச்சு வார்த்தைகளில் ஏற்றுக் கொண்டபடி பழிவாங்கும் இடமாறுதல் ஆணைகளை விளக்கிக்கொள்வது உள்ளிட்ட உறுதி மொழிகளை நிறைவேற்றவும் உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட் டது.

Leave A Reply

%d bloggers like this: