புதுதில்லி, மே 11 -குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டில் சிறுபான்மை முஸ்லிம் மக்க ளுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப் பட்ட மதவெறியர்களின் வன்முறை வெறியாட்டம் மற்றும் படுகொலைகள் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக்குழு (எஸ்ஐடி) சமர்ப்பித்துள்ள இறுதி அறிக்கையானது, இந்த வெறியாட் டங்களில் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு உள்ள தொடர்புகளை மூடி மறைக்கும் முயற்சியாகவே அமைந் துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், குஜராத் படுகொலை களில் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு உள்ள தொடர்புகள் குறித்து மீண்டும் புலனாய்வு செய்திட வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.குஜராத்தில் 2002ம் ஆண்டு பிப்ர வரி மாதத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதிலும் சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் – பாஜக, தலைமையிலான மதவெறிப் பரிவாரம் வரலாறு காணாத கொடிய வன்முறை வெறியாட்டத்தை அரங் கேற்றியது. 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் கொடூரமான முறை யில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொடூரமான வெறியாட்டத்தில் பாஜக முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு நேரடியான தொடர்பு உண்டு என்பதை பல்வேறு ஆதாரங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
இந்தப் படுகொலை சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இந்த வழக்குகளை திசைதிருப்பவும், மூடி மறைக்கவும், உண்மைகளை திரிக்க வும் ஆளும் பாஜகவின் நரேந்திர மோடி அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.இந்நிலையில் குஜராத் இனப்படு கொலை தொடர்பாக புலனாய்வு மேற் கொண்ட ஆர்.கே.ராகவன் தலைமை யிலான சிறப்புப் புலனாய்வு தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள் ளது. அந்த அறிக்கையில், முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஈசான் ஜாப்ரி உள்பட 70 முஸ்லிம்கள் உயிரோடு எரித்து படுகொலை செய்யப் பட்ட குல்பர்க் சொசைட்டி வளாகம் எரிப்பு வழக்கு தொடர்பாக குறிப்பிடும் போது, வெறியோடு வந்த கும்பலை நோக்கி ஈசான் ஜாப்ரி துப்பாக்கியால் சுட்டதால்தான் அந்தக்கும்பல் குல் பர்க் சொசைட்டி வளாகத்திற்கு தீ வைத்து எரித்தது என்றும், முதலில் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து வெறுப் பேற்றப்பட்டதால்தான் அதற்கு பழி வாங்கப்பட்டது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஒரு வினைக்கு எதிர் வினை என்ற நியூட்டன் கோட்பாடு இங்கு செயல்பட்டுள்ளது என்று, மத வெறியர்களின் கொடூஞ்செயலை நியாயப்படுத்தி வியாக்கியானமும் செய்யப்பட்டுள்ளது. இந்த வார்த்தை கள், முஸ்லிம்களுக்கு எதிராக மத வெறியர்கள் வெறியாட்டத்தை நடத்திக் கொண்டிருந்த போது, அதைக் கண்டு கொள்ளாமல் இருக்குமாறு முத லமைச்சர் நரேந்திர மோடி காவல் துறை உயரதிகாரிகளுக்கு உத்தர விட்டபோது, அவர்களின் செயல் களை நியாயப்படுத்துவதற்காக கூறிய வார்த்தைகள் என்பது நினைவு கூரத் தக்கது.இதேபோல குஜராத் வன்முறை சம்பவங்கள் குறித்து நியாயப்படுத்தும் விதமாக சிறப்புப் புலனாய்வுக்குழு வின் இறுதி அறிக்கை அமைந்துள்ளது
சிபிஎம் கண்டனம்
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெள்ளியன்று வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த மதவெறி வன்முறைகள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக்குழு (எஸ்ஐடி) சமர்ப்பித் துள்ள அறிக்கை, இந்தச் சம்பவங் களில் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு உள்ள மிகவும் கொடூரமான தொடர் பினை மூடிமறைக்க முயற்சிக்கிறது.இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று நரேந்திர மோடி கூறியது ஒரு குற்றமாகாது என்று சிறப் புப்புலனாய்வுக்குழு தனது அறிக்கை யில் கூறியுள்ளது. “ஒரு அறையின் நான்கு சுவர்களுக்குள் இது சொல்லப் பட்டதால் அது குற்றம் என்ற வரை யறைக்குள் வராது என்று விளக்கமும் அளித்துள்ளது. சிறப்புப் புலனாய் வுக்குழுவின் இத்தகைய வினோத மான தர்க்கத்தின்படி, வன்முறைச் சம் பவத்தில் தலையிட வேண்டாம் என் றும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் ஒரு முத லமைச்சர் தனது உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு கட்டளையிடுவது ஒரு குற்றச்செயலோ அல்லது கடமை யிலிருந்து தவறுவதோ ஆகாது என்று பொருள்படுகிறது. மேலும் இந்த அறிக்கையானது, குல்பர்க் சொசைட்டி வளாகத்தில் மத வெறிக்கும்பல் நடத்திய கொடூரமான வன்முறைத் தாக்குதலை நியாயப் படுத்தியிருப்பதும் அதிர்ச்சியளிக் கிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈசான் ஜாப்ரி உள்ளிட்டோர் கொடூரமாக எரித்து படு கொலை செய்யப்பட்ட இந்த வன் முறை வெறியாட்டத்தை நியாயப் படுத்தியுள்ள மேற்கண்ட அறிக்கை, அக்கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டு ஈசான் ஜாப்ரி வெறுப்பேற்றினார் என்றும் அதைத்தொடர்ந்து தாக்குதல் நடந்தது என்றும் கூறியுள்ளது.
ஒரு ‘வினையே’ அதற்கு பதிலடியாக ‘எதிர்வினைக்கு’ வித்திட்டது என்று நரேந்திர மோடியின் சொற்களை குறிப் பிட்டு இந்த அறிக்கை நியாயப்படுத்தி யுள்ளது.சிறப்புப் புலனாய்வுக்குழுவின் புலனாய்வும், அதன் அறிக்கையும் குஜராத்தில் நடத்தப்பட்ட திட்டமிட்ட வன்முறைகளை பகுத்து ஆராயாமல், எவ்வித சிந்தனையையும் செலுத்தா மல் உருவாக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடியை பாதுகாக்கும் விதமாக உச்ச நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு தாக்கல் செய்துள்ள இந்த அறிக் கை குறித்து கேள்வி எழுப்பப்பட் டுள்ளது. எனவே நரேந்திர மோடியின் தொடர்பு குறித்தும் அவரது செயல்கள் குறித்தும் மீண்டும் புதிதாக புலனாய்வு செய்யப்பட வேண்டியது அவசியம். அப்படி நடத்தும்போதுதான் உண்மை முழுமையாக வெளிவரும். நீதி நிலைநாட்டப்படும்.

Leave A Reply

%d bloggers like this: