புதுதில்லி, மே 11-
வங்கி, காப்பீட்டுத் துறைகளில் அந்நிய நேரடி முதலீடு கூடாது என இட துசாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவரு கின்றன. இந்தத் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை ஐமுகூ கூட்டாளிகள் எதிர்ப் புத் தெரிவிக்காமல் இருந் தனர். இந்த நிலையில் காப் பீட்டு துறையில் 26 சத வீத நேரடி அந்நிய முத லீட்டு அளவை (எப்டிஐ) 49 சதவீதம் அதிகரிக்க அரசு திட்டமிட்டு காப்பீட்டு திருத்த மசோதாவை கொண்டுவந்தது. இந்த மசோதாவுக்கு சில அமைச் சர்கள் மற்றும் திரிணாமுல் உள்பட சில கூட்டணி கட்சி உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருக் கிறார்கள்.
இதனால் காப்பீட்டு சட்ட (திருத்தம்) மசோதா 2008 தொடர்பான முடிவை அரசு தள்ளிவைத்தது.இதுதொடர்பாக கடந்த கேபினட் கூட்டத்தில் கலந்துகொண்ட மூத்த அமைச்சர் ஒருவர் கூறுகை யில், காப்பீடு திருத்த மசோதா தொடர்பாக அமைச்சர்கள் மட்டுமல்லா மல் கூட்டணிக்கட்சிகளிட மும் எதிர்ப்பு ஏற்பட்டது என்றார்.காப்பீடு திருத்த மசோ தா மாநிலங்களவையில் 2008ம் ஆண்டு வைக்கப் பட்டது. இந்த மசோ தாப்படி அந்நிய நேரடி முத லீட்டை 49 சதவீதம் வரை அதிகரிக்க வழி வகுப்பதாக இருந்தது. ஆனால் நிதி மீதான நாடாளுமன்ற நிலைக்குழு 26 சதவீத அந்நிய நேரடி முத லீட்டை கடைப்பிடிக்கலாம் என அறிவுறுத்தியது.
நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைப்படி 26 சதவீத அந்நிய நேரடி முத லீட்டையே அரசும் மேற் கொள்ளும் என எதிர் பார்க்கப்படுகிறது.அந்நிய முதலீட்டை 49 சதவீதம் அதிகரிக்கும் அர சின் முடிவை முன்னாள் நிதியமைச்சர் மற்றும் மூத்த பாஜக தலைவர் யஷ்வந்த் சின்கா தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு நிராகரித்தது.

Leave A Reply

%d bloggers like this: