காஞ்சிபுரம், மே 11 –
15 ஆண்டுகளாக பணி யாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி காஞ்சி புரம் காமாட்சியம்மன் பட்டு கூட்டுறவு சங்க ஊழியர்கள் அன்மையில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண் டும், தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
காமாட்சியம்மன் கூட்டு றவு சங்க விற்பனை நிலை யம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் செயலாளர் டி.நாராயணன் தலைமை தாங்கினார். சிஐ டியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், சங்கத் தலைவர் ஏ.வாசுதேவன், ஆர்.தாமோதரன், பி.ஸ்ரீதர் (மின்ஊழியர் மத்திய அமைப்பு), ஆர்.மதுசூத னன் (போக்குவரத்து), கே. ஜீவா (கைத்தறி சங்க தலை வர்), என் தனபால் உள்ளிட் டோர் பேசினார்கள்.

Leave A Reply

%d bloggers like this: