கிருஷ்ணகிரி, மே 11-ஓசூரில் திருமணமண்ட பத்தில் வைத்து நடக்க விருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள் ளது. இது கடந்த ஒரு வாரத் தில் நிறுத்தப்பட்ட 11வது குழந்தை திருமணமாகும்.இது குறித்து கிருஷ்ண கிரி மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் கலாவதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள் ளதாவது;ஓசூர் வட்டம் நந்திமங் கலம் கிராமத்தைச் சேர்ந்த வர்கள் வெங்கடேஷ்-ஷீலா தம்பதியினர். இவர்களது மகள் சவுமியா (17). இவரை பெங்களூரு கெங்கேரி உப்ப நகரைச் சேர்ந்த கோபால் நாகத்தினம் தம்பதியினரின் மகன் விசுசாகர் திருமணம் செய்வதாக தகவல் கிடைத் தது. ஓசூர் வட்டாட்சியர் லட்சுமிநாராயணன் மற் றும் வருவாய் துறையினர் யுஎஸ்பி திருமண மண்டபத் தில் விசாரணை மேற் கொண்டனர். மணப் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடையாததை தொடர்ந்து காவல் துறையினருக்கு தக வல் தெரிவிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் சரவ ணன் இரு தரப்பு பெற் றோரையும் விசாரித்து 18 வயது பூர்த்தியடையாத பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப் படி குற்றம் என்பதை விளக்கி கூறினார். எழுத்துப் பூர்வ மாக இரு தரப்பினரும் அளித்த வாக்குறுதியின் படி திருமணம் நிறுத்தப்பட் டது என்று சமூக நலத்துறை அலுவலர் தெரிவித்துள் ளார்.மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிருஷ் ணகிரி மாவட்டத்தில் 11 குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மீறி நடைபெற்ற 3 குழந்தை திரு மணங்களில் மாவட்ட ஆட் சியர் உத்தரவுபடி காவல் துறை நடவடிக்கை மேற் கொள் ளப்பட்டுள்ளது. இது போன்ற தொடர் நிகழ் வுகள் நடந்த வண்ணமே உள்ளது. இது போன்ற குற் றச் செயல்களை தூண்டு வோர், அனுமதிப்போர் யாராக இருந்தாலும் (மண் டப உரிமையாளர் புரோகி தர், சமையலர் உட்பட) சட் டப்படி தண்டனைக்கு உரியவராவர் என்றும் அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

Leave A Reply