புதுதில்லி, மே 11-நான்கு நாட்களாகத் தொடரும் ஏர் இந்தியா விமானிகளின் போராட்டத் தில் தலையிட உச்சநீதிமன் றம் மறுத்து விட்டது.நிதி நெருக்கடியில் சிக் கித் தவிக்கும் அரசு நிறுவன மான ஏர் இந்தியா நிறு வனத்தில் பணிபுரியும் விமா னிகளின் போராட்டத்தின் காரணமாக 12 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப் பட்டன. மேலும், நூற்றுக் கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித் சிங், பிரதமர் மன் மோகன் சிங்கிடம் தெரிவித் தார்.மேலும், போராட்டத் தில் ஈடுபட்டுள்ள விமானி கள் மீது எஸ்மா (அத்தியா வசியப் பணிகள் பராமரிப்பு சட்டம்) சட்டத்தின்கீழ் நட வடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.இதனிடையே ஏர் இந் தியா நிறுவனத்தின் டிரீம் லைனர் விமானத்திற்கான விமானிகள் பயிற்சி உத்தர வை அமல்படுத்த இடையூறு விளைவிக்கும் விதமாக போராட்டத்தில் ஈடுபட் டுள்ளதாக இந்திய விமானி கள் சங்கத்தின் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு துவங்குவதற்காக ஏர் இந் தியா நிர்வாகம் தாக்கல் செய்த மனுவினை விசாரித்த உச்சநீதிமன்ற ஒரு நபர் அமர்வாய நீதிபதி டி.எஸ். தாகூர் அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க மறுத்து உத்தரவிட்டார்.
“போராட்டத்தில் ஈடு பட்டுள்ள விமானிகள் நீதி மன்ற அவமதிப்பு எதையும் செய்துவிடவில்லை. அவர் களுடன் பிரச்சனை இருக்கு மானால் அவற்றைப் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும்” என்று அமர்வா யம் தெரிவித்தது.மேலும், விமானிகளின் போராட்டம் சட்டவிரோத மானது என்றால் விமான நிறுவனம் அவர்களின் மேல் நடவடிக்கை எடுக்க லாம் என்று அமர்வாயம் குறிப்பிட்டது.இந்நிலையில் பேச்சு வார்த்தை நடைபெற வேண்டுமென்று விரும்பி னால் முதலில் பணிக்கு வர வேண்டும். அதன்பிறகே பேச்சுவார்த்தை என்ற அஜித் சிங்கின் மிரட்ட லுக்கு பணிக்குத் திரும்ப வேண்டுமானால் வேலை நீக்கம் செய்யப்பட்ட விமானிகளை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ள வேண்டும். ரத்து செய்யப்பட்ட இந்திய விமா னிகள் சங்கத்தை மீண்டும் அங்கீகரிக்க வேண்டும் என்று இந்திய விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: