புதுதில்லி, மே 11- என்சிஇஆர்டி பாடப் புத்தகத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தொடர்பாக கேலிச்சித்திரம் வெளியிடப் பட்டதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் வெள் ளிக்கிழமை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித் தனர். அதேபோன்று ஏர் செல் – மேக்சிஸ் ஒப்பந்தத் தில் சிதம்பரத்திற்கு தொடர்பு உள்ளது குறித்து 2வது நாளாக அவையில் கொந் தளிப்பு காணப்பட்டது. அம்பேத்கர் கேலிச்சித் திரம் தொடர்பாக பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ராஷ்ட் ரிய ஜனதா தளம், அதிமுக, சிபிஐ உறுப்பினர்கள் மக்க ளவை, மாநிலங்களவையின் மையப்பகுதிக்கு வந்து, எதிர்ப்பு குரல் எழுப்பினர்.மக்களவையில் ஏர்செல் -மேக்சிஸ் ஒப்பந்தத்தில் தனக்கு தொடர்பு இல்லை என மகன் கார்த்தி வெளி யிட்ட அறிவிப்பை உள் துறை அமைச்சர் சிதம்பரம் படித்தபோது அதற்கு பாஜக உறுப்பினர்கள் யஷ் வந்த் சின்கா, ஷாநவாஸ் ஹூசைன் மற்றும் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். மக்களவையின் எதிர்க் கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜ், அமைச்சர் தனது மகன் வெளியிட்ட அறி விப்பு கடிதத்தை அவையில் படிக்க சபாநாயகர் அனு மதித்தது எப்படி என்றார்.
நாடாளுமன்ற விவகா ரத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கூறுகையில், ப.சிதம்பரம் தனக்கு உள்ள உரிமையை மீறாமல், தனிப் பட்ட அறிவிப்பை தந்துள் ளார். சின்கா பொறுப்பற்ற முறையில், விளைவுகளை எண்ணிப்பார்க்காமல், உள் துறை அமைச்சர் மீதும் அவரது மகன் மீதும் குற்றம் சாட்டியுள்ளார் என்றார். அறிவிப்பு என்பது கட் டாயம் விதிமுறை மீறப்பட வில்லை என்றும் பன்சால் கூறினார்.ஏர்செல்-மேக்சிஸ் ஒப் பந்தம் தொடர்பாக மகன் அறிக்கையை சிதம்பரம் செவ்வாய்க்கிழமை படித் தது தொடர்பாக எதிர்க்கட் சியினர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மாநிலங்கள வை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, அவரது கட்சியின் உறுப்பினர் பிர காஷ் ஜாவேத்கர் தந்த நோட்டீசுக்கு பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்ற விவகார இணையமைச்சர் ராஜீவ் சுக்லா பேசினார். அப்போது, அவர் மதியம் 12 மணிக்குப்பின்னர், சம் பந்தப்பட்ட அமைச்சர்கள் இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிப்பார்கள் என அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: