புதுதில்லி, மே 11-கர்நாடக முன்னாள் முதல் வர் பி.எஸ். எடியூரப்பா மீது கூறப்பட்டுள்ள சட்டவிரோத சுரங்க முறைகேடுகள் தொடர் பாக மத்தியக் குற்றப் புலனாய் வுக்கழகத்தின் விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெருநிறுவனங்கள் மற்றும் அரசியல் செல்வாக்குகளுக் குப் பணியாமல் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று தலைமை நீதிபதி எஸ்.ஹெச். கபாடியா தலைமையிலான சிறப்பு வன அமர்வாயம் சிபி ஐக்கு உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு ஆந்திரப்பிரதேச அரசு ஒத்துழைக்க வேண்டு மென்று உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.கர்நாடக சுரங்க ஊழல் தொடர்பாக மத்திய அரசு நிய மித்த அதிகாரம் பெற்ற குழு ஏப்ரல் 20ம் தேதியன்று தனது அறிக்கையைத் தாக்கல் செய் தது. அவ்வறிக்கையில், சட்ட விரோதமாகச் செயல்பட்ட சுரங்க நிறுவனங்களிட மிருந்து ஜிண்டால் நிறுவனம் பெருமள வில் சுரங்கப் பொருட்களைக் கொள்முதல் செய்துள்ளது எனக்கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: