மனித சமூகத்தின் அடிப் படை தேவையான ஆடை தயாரிக்கும் தையல் தொழிலில் தமிழகத்தில் சுமார் 20 லட்சத் துக்கும் மேற்பட்டவர்கள் ஈடு பட்டு வருகின்றனர். அவர்களில் பெரும்பான்மையோர் பெண்களாவர்.தங்களது சொந்த பணிகளை யும் கவனித்துவிட்டு, வருமானம் ஈட்டுவதற்கு பொருத்தமான தொழில் என்ற முறையில் பெண் தொழிலாளர்களை அதிகமாக ஈர்க்கும் தொழிலாக தையல் தொழில் மாறி வருகிறது. ஆனால் இவர்கள் எவ்வித சட்ட பாதுகாப்புக்கும் உட்பட்டவர்கள் அல்ல. மேலும் மிகக்குறைந்த வருவாயே இவர்களுக்கு கிடைக்கிறது.இதனை அடுத்து சிறு தையல் கடைகள், ஆண்கள் தையலகம் மற்றும் பெண்கள்தையலகம் என தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இவைகளில் பணிபுரிகின்றனர்.
சீசன் காலங்களில் மட் டுமே இவர்களுக்கு கூடுதல் தொழில் வாய்ப்புகள் கிடைக்கின்றன. அத்தகைய நேரங்களில் தேவைக்கேற்ப தொழிலாளர்கள் கிடைப்பதில்லை.நகர்ப்புறங்களில் பெருகி வரும் ஆயத்த ஆடை தயாரிக் கும் நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர தையல் கடைகளை நலிவடைய செய்கின்றன. நூற் றுக்கணக்கான ஆயத்த ஆடை நிறுவனங்கள் நகர்ப்புறங்களில் பெருகிவரும் சூழலில், ஆலைகளில் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு தொழிற்சங்க உரி மைகள் மறுக்கப்படுவதோடு சட்டப்பூர்வமான உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. இந்நிறுவனங்களில் பீஸ்ரேட் முறையிலேயே ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. பி.எப், ஈஎஸ்ஐ, கிராஜூட்டி, 8 மணி நேர வேலை போன்றவைகளும் அமலாவதில்லை. இவை அமலாவதை கண்காணிக்க வேண்டிய தொழிலாளர் ஆய்வகத் துறையும் இதனை கண்டு கொள்வதில்லை. இவர்களுக்கு சட்ட உரிமைகளை பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கைகளை துவக்கிட வேண்டியுள்ளது.இவைகளுக்கும் மேலாக தமிழகத்தில் 80 மகளிர் தையல் கூட்டுறவு நிறுவனங்கள் தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இவைகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண் தையல் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இவர்கள் பள்ளி குழந்தைகளுக்கான இலவச சீருடை தைக்கும் தொழில் செய்கின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு நிர்ணயிக்கும் கூலியே, வெளிச் சந்தையில் உள்ளதைவிட மிகக் குறைவாகத்தான் உள்ளது. உதாரணமாக துணி மட்டும் பெற்று அரைக்கால் சட்டை தைத்து கொடுப்பதற்கு அரசு நிர்ணயித்திருக்கும் கூலி ரூ.17 மட்டுமே. ஆனால் வெளிச் சந்தையில் இதற்கான கூலி ரூ.80 ஆகும். அரசு அறிவிக்கும் கூலியை கூட வெளிப்படை யாக தெரிவிப்பதில்லை. மேலும் இவர்களுக்கும் ஈஎஸ்ஐ, கிராஜூட்டி போன்ற அடிப்படையான உரிமைகளும் மறுக்கப் படுகின்றன.இவர்கள் செய்து முடித்து வேலைக்கான கூலியை பெறு வதற்கு ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டும். மேலும் இவர்கள் பெறும் கூலியில் 5 சதவிகிதம் சிக்கன சேமிப்பு நிதியாக பிடித் தம் செய்கின்றனர்.
இவர்களிடம் பிடித்தம் செய்கிற சிக்கன சேமிப்பு தொகை குறித்தோ அவர்களுடைய சேமிப்பில் எவ் வளவு இருப்புத் தொகையாக உள்ளன என்பது குறித்தோ வெளிப்படையாக தொழிலாளர் களுக்கு தெரிவிப்பதில்லை. இதில் பெருமளவில் முறை கேடுகள் நடைபெறுவதாக புகார்கள் உள்ளன. மேலும் எம்ப்ராய் டரிங் தொழிலிலும் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.தையல் தொழிலில் ஈடுபட் டுள்ள சிறு மற்றும் நடுத்தர கடைகளுக்கு 1995 முதல் சில ஆண்டு காலம் குறைந்த கட்ட ணத்தில் மின்சாரம் வழங்கப்பட்டது. அதை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இந்நிலையில், நெசவுத் தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருவதைபோன்று தையல் தொழில் சார்ந்தவர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டுமென்றகோரிக்கை வலுவாக உள்ளது.மேலும் தமிழகத்தில் அம லாகி வரும் மின்வெட்டு தையல் தொழிலையும், பிற தொழில்களை போன்று மிகக் கடுமையாக பாதித்துள்ளது. ஆயத்த ஆடை நிறுவனங்கள், பிற நடுத்தர தையல் நிறுவனங்கள் உள்பட கணிசமானவர்கள் நவீன இயந்திரங்களை பயன்படுத்தியே தொழில் செய்து வருகின்றனர். மின்தடை காலங்களில் தையல் இயந்திரங்களை இயக்க முடியாததால் தொழில் முடக்கமும் வேலையிழப்பும் வருமானம் இழப்பும் ஏற்படுகிறது. அதே போன்று இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவதால் தொழில் செய்ய இயலாத சூழ்நிலைமையாலும் தொழில் பாதிப்புக்குள்ளாகிறது. இதனால் மின்தடை காலங்களில் ஜெனரேட்டர் போன்றவைகளை இயக்கிட அரசு மானியம் அளித்திட வேண்டுமெனவும் கோரிக்கைகள் வருகின்றன.தையல் தொழிலாளர்களின் பல்வேறு அடிப்படையான கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று மாலை 4 மணி அளவில் தையல் சம்மேளனத்தின் 3 வது மாநில மாநாடும், அதன் துவக்க நிகழ்ச்சியாக ஆயிரக்கணக்கான தையல் தொழிலாளர்கள் பங்கேற்கும் பேரணியும் சென்னையில் நடைபெறுகிறது.நலவாரியங்களை முறையாக செயல்படுத்தி காலதாமதமின்றி பணப் பயன்கள் வழங்கிட வேண்டும்; பெண்களுக்கான வயது வரம்பை குறைத்து, அனைவருக்கும் பென்சன் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் பணப்பயன் தொகைகள் உயர்த்தப்பட வேண்டும், தையல் தொழில் செய்திட குறைந்த கட்டணத்தில் மின்சாரம், மானிய விலையில் நவீன தையல் இயந்திரங்கள் வழங்கிட வேண்டும், நலவாரிய பதிவு மற்றும் பணப்பயன் பெற வங்கிக் கணக்கு மற்றும் சாதி சான்றிதழ் கேட்டு நிர்ப்பந்தம் செய்வதை கைவிட வேண்டும், கார்மென்ட்ஸ் மற்றும் ஏற்றுமதி வளாகங்களில் பணிபுரியும் தையல் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை, குறைந்த பட்ச ஊதியமாக ரூ.10 ஆயிரம், சட்ட உரிமை களான பி.எப், ஈஎஸ்ஐ, கிராஜூட்டி ஆகியவற்றை உறு திப்படுத்த வேண்டும், கூட் டுறவு தையல் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி உயர்வு, தொடர்ச்சியான வேலை, பிஎப், ஈஎஸ்ஐ போன்றவற்றை அமல்படுத்த வேண்டும், பிடித்தம் செய்யும் சிக்கன சேமிப்பு தொகைக்கான விபரத்தை முறையாக தெரிவிக்க வேண்டும், நூல், பட்டன் போன்றவைகளை கூலியில் பிடித்தம் செய்யாமல் வழங்க வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து சென்னை வள்ளுவர் கோட்டம் முன் பிருந்து பேரணி துவங்கு கிறது. இதில், தையல் தொழிலாளர்கள் அனைவரும் பங்கேற்க அழைக்கிறோம். வாரீர்!-
கே. செல்லப்பன்பொதுச் செயலாளர்தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சம்மேளனம் (சிஐடியு)

Leave A Reply

%d bloggers like this: