திருப்பூர், மே 11-அனைத்து மோட்டார் வாகனங்களுக்குரிய இன்சூரன்ஸ் பிரிமியத் தொகை உயர்த்தப்பட்டதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வெள்ளியன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு திருப்பூர் மாவட்ட மோட்டார் தொழிலாளர் சங்கத் தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். இதில் டூரிஸ்ட் வாகனங்களுக்கு ஆயுட் கால வரிவிதிப்பை ரத்து செய்ய வேண்டும், ஓட்டுநர் உரிமம் பெற்ற அனைவருக்கும் பேட்ஜ் வழங்க வேண்டும், கட்டாய எய்ட்ஸ் பரிசோதனை முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.இதில் மோட்டார் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு, சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் என்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.இதில் மோட்டார் சங்க நிர்வாகிகள் மூர்த்தி, ஜெயக்குமார் உள்பட தனியார் சரக்குப் போக்குவரத்து வாகன ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் பெருமளவு கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: