புதுதில்லி: 2ஜி அலைக்கற் றை ஒதுக்கீட்டில் நடை பெற்ற முறைகேடுகள் தொடர்பாகக் குற்றம் சாட் டப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிறையில் இருந்து வருகிறார். இந் நிலையில் ஆ.ராசா ரூ.200 கோடி லஞ்சமாகப் பெற் றுள்ளார் என்ற புதிய புகா ரின் அடிப்படையில் ஆ. ராசாவை ஜாமீனில் விடுவ தற்கு சிபிஐ எதிர்ப்பு தெரி வித்துள்ளது. ஆ.ராசா ரூ.200 கோடி லஞ்சம் பெற்றுள் ளார் என்ற குற்றச்சாட்டின் மீது விசாரணை நடை பெற்று வருகிறது. எனவே, அவருக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என்று சிபிஐ தரப் பில் வாதாடிய வழக்கறிஞர் ஏ.கே. சிங் தெரிவித்தார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா மற்றும் அரசு அலுவலர்கள் சிலர் இணைந்து ரூ.200 கோடியை லஞ்சமாகப் பெற்றது குறித்து சிபிஐ முன் னர் அறிந்திருக்கவில்லை. தற்போது இவ்விவகாரம் விசாரணையில் வெளிப் பட்டுள்ளது என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஏ.கே. சிங் தெரிவித்தார். எனவே, ஆ. ராசாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப் பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி மே 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave A Reply

%d bloggers like this: