இந்தியாவின் நிதிநிலை ஒரே சீராக இருக் கிறது என்று திரும்பத் திரும்ப அறிவிப்பதற்கு மத்திய ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் அயர்வதே இல்லை. ஆனால் உண்மை நிலைமை என்னவோ இந்தியாவின் நிதி நிலை சரிவை நோக்கிச் செல்கிறது என்பதுதான்.அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகிற பங்குச்சந்தை நிலவர ஆய்வு நிறுவனம் மேக்-க்ரா ஹில்
இதன் ஒரு பிரிவுதான் ஸ்டாண்டர்ட்ஸ் அன் பூவர்ஸ் (எஸ் அன் பி) என்ற ஆய்வு நிறுவனம். இந்த நிறுவனம் தற்போது இந்தியாவின் நிதி நிலவரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை கூறுகிற விவரங்கள், இத்தனை நாட் களாக பொருளாதார வளர்ச்சி குறித்து ஆட்சி யாளர்கள் கூறி வந்திருக்கிற பொய்யை அம் பலப்படுத்துவதாக இருக்கின்றன.இந்தியாவின் நிதி நிலை “பிபிபி-பிளஸ்” (சீரான நிலை)+ என்பதிலிருந்து “பிபிபி-மைனஸ்” (எதிர்மறை) என்ற நிலைக்கு இறங்கி விட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது. மிக அதிகமான பணவீக்கம், குறை வான வளர்ச்சி வேகம், கடுமையான நிதிப் பற்றாக்குறை, விரிவடைந்து வரும் இருப்புக் கணக்குப் பற்றாக்குறை ஆகிய காரணங்களால் இந்த பிபிபி-மைனஸ் என்ற குறைந்த தர நிர்ணய நிலைக்கு இந்தியா சரிவடைந்திருக் கிறது என்று எஸ் அன் பி அறிக்கை கூறுகிறது.இந்த நிலைமைகளை இரண்டு ஆண்டு களுக்குள் உறுதியான முறையில் சீர்ப்படுத்த வில்லை என்றால், இந்தியாவின் நிதி நிலை வெகுவாகக் கீழே இறங்கிவிடும் என்று அந்த அறிக்கை அச்சுறுத்துகிறது.
உறுதியான முறை யில் என்றால் இவர்களது நெறிமுறைகளின்படி, இனிமேலும் பெட்ரோலியம் உள்ளிட்ட எரி பொருள்களின் விலை நிர்ணயத்தை அரசாங்கம் தனது பொறுப்பில் வைத்துக்கொள்ளக்கூடாது, நேரடி-மறைமுக வரிகளை அதிகரிக்க வேண் டும், நிதிச் சேவைகள் தொடர்பாக இன்னும் முடி வெடுக்காமல் வைத்திருக்கிற சீர்திருத்தங்கள் தொடர்பாக உடனே முடிவெடுத்துச் செயல் படுத்த வேண்டும்… என்பதே அர்த்தமாகும். நிதிச் சேவைகள் தொடர்பான சீர்திருத்தங்கள் என் பதன் பொருள், காப்பீடு, வங்கி உள்ளிட்ட துறை களை முற்றிலுமாகப் பன்னாட்டுத் தனியார் நிறுவனங்களின் வேட்டைக்களமாக மாற்றுவது என்பதே. பொதுத்துறை நிதி நிறுவனங்களை முடக்க வேண்டும் என்பதே.இந்தியாவின் நிதிநிலை சரிவடைந்திருப் பதற்குக் காரணமே இப்படிப்பட்ட தாராளமய நடவடிக்கைகள்தான். அதை இன்னும் வேக மாக்கி முழுவதுமாக நசிந்து போக வழிகாட்டு கிறது எஸ் அன் பி நிறுவனம். அரசியல் கட்டா யங்களுக்கு உட்படக்கூடாது என்றும் அந்த நிறு வனம் கூறுகிறது. அதாவது, பாதிக்கப்படக் கூடிய மக்களின் பிரதிநிதிகள் எதிர்ப்புத் தெரி வித்தால் அதை அரசு பொருட்படுத்தக்கூடாது. ஏற்கெனவே ஆட்சியாளர்கள் அப்படித்தான் நடந்துகொள்கிறார்கள்.
அதை இன்னும் கறாராக் கக் கூறுகிறது எஸ் அன் பி.பொதுத்துறைகள் அழிப்பு, விலைவாசி உயர்வு ஆகிய விளைவுகளுக்கு இட்டுச்செல் லும் நடவடிக்கைகளை எடுக்கிறபோதெல்லாம், உலக நிலவரத்தைக் காரணம் காட்டுவது மத் திய ஆட்சியாளர்களின் ஒரு உத்தி. அதற்குத் தோதாக, உலகப் பொருளாதார ஆதிக்க சக்தி களின் விருப்பத்திற்கிணங்க எஸ் அன் பி நிறு வனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சென்று, அரசின் சரணாகதி நடவடிக்கை களைத் தடுக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு மக்கள் இயக்கங்களின் முன் இருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.