திருவண்ணாமலை, ஏப்.25-
திருவண்ணாமலை அருகே உள்ள பொற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (61). விவ சாயி. இவர் அப்பகுதி யிலுள்ள நிலத்தில் கரும்பு பயிர் செய்துள்ளார். கரும்பு தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக அண்ணா மலை சென்றார். அச்சமயம் தோட்டத்தில் மர்ம நபர்கள் எரிசாராயத்தை பதுக்கி வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இது குறித்து அண்ணா மலை கலசப்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் தெரி வித்தார். இவரது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சேகர், சப்இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி, ரகு, ஏழு தாசன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு 10 கேன்களில் பதுக்கி வைக் கப்பட்டிருந்த 350 லிட்டர் எரிசாராயத் தினை பறிமுதல் செய்தனர். இதுசம்பந்தமாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து எரிசாராயத்தை பதுக்கிய மர்ம நபர்கள் யார் என் பது குறித்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ள னர்.

Leave A Reply

%d bloggers like this: