தஞ்சை, ஏப்.25-காலிப் பணியிடம் நிரப் புதல், தொகுப்பூதிய முறை ஒழிப்பு, ஊதிய முரண்பாடு களைதல், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண் டும் வேலை, புதிய பென்சன் திட்டம் ரத்து செய்வது உள் ளிட்ட 18 அம்சக் கோரிக் கைகளை முன் வைத்து தமி ழகத்தில் ஆயிரம் மையங் களில் அரசு ஊழியர்கள் கண்டன முழக்க ஆர்ப் பாட்டம் நடத்தினர். அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 மையங் களில் கண்டன ஆர்ப்பாட் டம் புதனன்று (ஏப்.25) நடைபெற்றது. தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்து வமனை முன்பு தெற்கு வட் டத் தலைவர் ஆர்.ராஜூ தலைமையில் நடந்த ஆர்ப் பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் இரா.பன்னீர் செல்வம் சிறப்புரையாற் றினார். வட்டப் பொருளா ளர் கே.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
கூட்டுறவுத் துறை (கண பதி நகர்)அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் ஆகிய இடங் களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடந்த ஆர்ப் பாட்டத்திற்கு வடக்கு வட் டத் தலைவர்கள் தி.இரவிச் சந்திரன், தெற்கு வட்டத் தலைவர் ஆர்.ராஜூ ஆகி யோர் தலைமை தாங்கினர். கோரிக்கைகளை விளக்கி வட்டச் செயலாளர்கள் க.சண்முகம், கு.பாண்டியன் ஆகியோர் பேசினர். மாவட்ட நிர்வாகிகள் டி. மோகன் ராஜ், ஏ.ரெங்கசாமி ஆகி யோர் சிறப்புரையாற்றினர். இப்போராட்டங்களில் ஏராளமான அரசு ஊழி யர்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் கி.ஜெயபாலன் தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி மாவட் டச் செயலாளர் சி.கோவிந்த சாமி, ரவிச்சந்திரன், தேவ தாஸ், ஜீவா உள்ளிட்டோர் பேசினர். முடிவில் சங்கத்தின் வட்டச் செயலாளர் ஆர்.ரெங் கசாமி நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: