சென்னை ஏப். 25 –
விஎச்எஸ் மருத்துவமனை ஊழியர்களின் தொடர் போராட்டத்திற்கு சிஐடியு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரி வித்துள்ளன.இதுபற்றிய விவரம் வருமாறு:விஎச்எஸ் மருத்துவம னையில் செவிலியர்கள், ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பணியாற்று கின்றனர். ஊதிய உயர்வு அளிக்க வேண்டும், நீதி மன்ற தீர்ப்புபடி நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.இந்நிலையில், தொடர் வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டுள்ள ஊழி யர்கள், புதனன்று (ஏப்.25) சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ஆர்ப் பாட்டம் செய்தனர்.இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எஸ். குமாரதாசன் (சிஐடியு), கே. வனஜகுமாரி (அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங் கம்), எம்.தாமு (இந்திய ஜன நாக வாலிபர் சங்கம்), டாக் டர் ரெக்ஸ் சற்குணம் (தமிழ் நாடு மக்கள் நல்வாழ்வு இயக்கம்), பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுப் பள்ளிக்கான மாநில மேடை), எஸ்.ரமேஷ்சுந்தர் (தமிழ்நாடு மருந்து விற் பனை மற்றும் பிரதிநிதிகள் சங்கம்), டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் (மருத்துவ ஊழியர் கூட்டமைப்பு) உள் ளிட்டோர் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: