விழுப்புரம், ஏப். 25-
விழுப்புரம் – புதுவை தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு பகுதியில் அமைந்திருக்கும் வாசவி கல்வி யியல் கல்லூரியில் தேசிய தர நிர்ணய ஆய்வு நடந்துள் ளது. அதைத் தொடர்ந்து தர நிர்ணய சான்று இக் கல்லூரிக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டள்ளது.இது குறித்து கல்லூரியின் முதல்வர் அம்புஜா தெரிவித்தது வருமாறு;இக்கல்லூரியில் நூறுக்கும் மேற்பட்ட மாணவர் கள் படித்து வருகின்றனர். முனைவர் பட்டம் பெற்ற , தேசிய ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்ற விரிவுரை யாளர்கள் பணியாற்றுகின்றனர். கலாச்சார நிகழ்வுகள் மற்றும் பல விழாக்கள் மாணவர்களின் கலை நயத் துடன் நடைபெறுகிறது. கல்லூரியில் படிக்கும் மாண வர்கள் சுற்றுப்புறத்திலுள்ள பள்ளி களுக்கு சென்று கிராமப்புற மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின் றனர். கல்விச் சேவையில் சிறப்பாக ஈடுபட்டுவரும் இக்கல்லூரியை தேசிய மதிப்பீடு மற்றும் தரநிர்ணய குழு (என்ஏஏசி) உறுப்பினர்கள் ஆய்வு செய்து சென்றுள்ளனர். இக்கல்லூரிக்கு விரைவில் தேசிய தர நிர்ணய சான்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: