தஞ்சை, ஏப்.25-சத்துணவு ஊழியர் களுக்கு வரையறுக்கப் பட்ட ஊதியம், சட்டரீதி யான ஓய்வூதியம் உள் ளிட்ட 6 அம்சக் கோரிக்கை களை முன்வைத்து தமிழக அளவில் ஏழு மண்டலங் களில் 72 மணிநேர உண்ணா விரதப்போராட்டம் புத னன்று (ஏப்.25) தொடங்கியது.தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தஞ்சா வூர், திருவாரூர், நாகப்பட் டினம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த ஊழியர்கள் – உண்ணாவிர தப் போராட்டத்தில் பங் கேற்றனர். மாவட்டத் தலைவர்கள் ஆர்.மனோகரன், எஸ். முத்து மாணிக்கம், ஆர். கமலநாதன், ச.காமராஜ் ஆகியோர் தலைமை தாங்கி னர்.
மாவட்டச் செயலா ளர்கள் அ.பாலகிருஷ்ணன், ஆர்.அறிவழகன், எம். இராமச்சந்திரன், துரை. அரங்கசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாநிலச் செயலா ளர்கள் பே.பேயத்தேவன், கு.சக்தி ஆகியோர் சிறப் புரையாற்றினர். சிஐடியு தஞ்சை மாவட்டச் செய லாளர் ஆர்.மனோகரன் துவக்கவுரையாற்றினார். சகோதர சங்கங்களின் தலை வர்கள் இரா.பன்னீர்செல் வம், ந.குருசாமி, சா. கோ தண்டபாணி, ஆர்.தமிழ் மணி, வெ.கோபால்சாமி, ப.சத்தியநாதன், பி.முல் லைவனம், வ.சிவசங்கரன், ம.இராஜன், எம்.தினேஷ், பி.கோதண்டபாணி ஆகி யோர் ஆதரித்துப் பேசினர். முதல் நாள் போராட்டத் தை ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட் டத்தலைவர் ஆர்.புண்ணிய மூர்த்தி முடித்து வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் தி.இரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
கோரிக்கைகள்
உண்ணாவிரதப் போராட்டத்தில் அரசு ஊழியராக்கி வரையறுக்கப் பட்ட காலமுறை ஊதியம், சட்டரீதியான குடும்ப பாது காப்புக்கான ஓய்வூதியம், சமையலர் பணியிடங்களை பணி மூப்பு அடிப்படை யில் உதவியாளர்களைக் கொண்டு நிரப்பிட வேண் டும்; குழந்தைகளுக்கான உணவு செலவினத் தொகை யை விலைவாசி உயர்வுக் கேற்ப உயர்த்தி வழங்க வேண்டும்; பணி முடிவு காலத்தில் வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெறு கிறது.

Leave A Reply

%d bloggers like this: