தருமபுரி, ஏப் 25-
தியாகி லீலாவதி நினைவு தினத்தையொட்டி மக்க ளின் அடிப்படை பிரச் சனைகளை வலியுறுத்தி தரு மபுரி வட்டம் முழுவதும் அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.தருமபுரி வட்டம் அதி யமான் ஊராட்சிக்குட்பட் டது ஜீவாநகர். வெத்தல காரன்பள்ளம் ஆகிய இடங் களில் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங் குள்ள மக்கள் குடிமை பொருட்கள் வாங்குவதற்கு சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏலகிரியான் கொட் டாய்க்கு செல்லவேண்டும். இக் கிராமத்திற்கு செல்ல தேசிய நெடுஞ்சாலை நான்கு வழி சாலை குறுக்கிடுவதால் சாலையை கடக்கும் பொழுது 6 பேர் உயிரிழந் துள்ளனர்.
எனவே இது போன்ற துயரசம்வம் நடக்கா மல் இருக்க ஜீவாநகருக்கு பகுதி நேரரேசன்கடை வழங்கவேண்டும். நகருக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.மிட்டாரெட்டிஅள்ளி ஆதிதிராவிடர் காலனியில் குடிநீர்பிரச்சனையை போக்க வேண்டும், பழுதடைந் துள்ள தொகுப்பு வீடுகளை சரிசெய்யவேண் டும், கழிவு நீர்கால்வாய், தெருச்சாலைக்கு சிமெண்ட் வசதி உள்ளிட்ட அடிப்படை கோரிக்கை களை நிறைவேற்றவேண் டும், என்ற கோரிக்கைகள் முன் வைக்கப் பட்டன.கொண்டகரஅள்ளி பஞ் சாயித்து காளிகரம்பு கிராமத் திற்கு குடிநீர் பிரச்சனையை போக்கவேண்டும், பழு தடைந்துள்ள சாலையை சரிசெய்யவேண்டும், காளி கரம்பு கிராமத்திற்கு புதிய ரேசன்கடை வழங்கவேண் டும், சாக்கடைகால்வாய் இலவச மனைபட்டா தார் சாலை ஆகியகோரிக்கை களும் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தினர்.கொண்டகரஅள்ளி ஊராட்சிமன்ற அலுவலகத் திற்கு முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் பி. மஞ்சு தலைமைவகித்தார். மிட்டா ரெட்டிஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கிளைசெயலாளர் எல். மாலா தலைமை தாங் கினார். ஜீவாநகர் மக்களின் கோரிக்கைகளை வலியு றுத்தி தருமபுரி வட்டாட் சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத் திற்கு கிளைச்செயலாளர் எம். புஷ்பா தலைமை வகித்தார்.மாவட்டச் செயலாளர் டி.எஸ். கவிதா, மாவட்ட துணைத் தலைவர் கே. பூபதி, மாவட்டதுணைச் செயலாளர் சி. வாசுகி, எஸ். அன்பு தங்கம், மாவட் டக்குழு உறுப்பினர்கள் கே. சுசிலா, ஆர். மங்ககை மற் றும் ருக்குமணி லட்சுமி ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர், மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழுஉறுப்பினர் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் எம்.ராஜேந் திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: