சென்னை, ஏப்.25-
மாற்றம் தந்த மக்களுக்கு அதிமுக அரசு விலை யேற்றத்தை பரிசாக தருகி றது என்று கே.பாலபாரதி எம்எல்ஏ சாடினார்.தோழர் லீலாவதியின் 15வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் ஆயிரம் விளக்கு பகுதி சார்பில் செவ்வா யன்று (ஏப்.24) நுங்கம்பாக் கத்தில் பொதுக்கூட்டம் நடை பெற்றது.இக்கூட்டத்தில் கலந்து கொண்டு அச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் கே. பாலபாரதி எம்எல்ஏ பேசி யது வருமாறு:தோழர் லீலாவதி ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்து மாதர் சங்கத்தில் அளப்பரிய பணியாற்றிய வர். மதுரையில் வியாபாரிக ளுக்கு பெரும் அச்சுறுத்த லாக இருந்த ரவுடிகளை எதிர்த்து மக்களைத் திரட்டி போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டார். மதுரை மாநகராட்சியில், ஊழல் கவுன்சிலர்களுக்கு மத்தியில் லீலாவதி நேர்மை அனை வராலும் புகழப்பட்டது.
அப்படிப்பட்ட வீராங் கணை லீலாவதி, மக்களின் குடிநீர் தேவைக்காகப் போரா டினார். சமூக விரோதி களால் வெட்டிக் கொல்லப் பட்டார். அப்போதைய திமுக அரசாங்கம் லீலாவதி குடும்பத்தினருக்கு நிதி வழங்க முன் வந்தபோது அதை அவரது குடும்பம் ஏற்க மறுத்துவிட்டது. மத்திய அரசின் வழியில் மாநில அரசும் மக்கள் விரோதக் கொள்கைகளை தீவிர மாக அமலாக்குகிறது. பெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்த மக்களின் மீது அதிமுக அரசு பால், பேருந்து கட்டண உயர்வை திணித் தது. சங்கரன் கோயில் இடைத்தேர்தலில் வெற்றிக்கு பிறகு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்த மக் கள் விரோதப் போக்கைக் கண்டித்து சட்டமன்றத் திலும், மக்கள் மன்றத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி போராடி வருகிறது.மக்களை திரட்டி ஜனநா யக முறையில் போராடா மல், மாவோயிஸ்ட்டுகள் மாவட்ட ஆட்சியரை கடத்து வதால், கோரிக்கைகளை வெல்ல முடியாது. அதேசம யம், மக்கள் ஜனநாயக பூர்வ மாகப் போராட்டம் நடத்தும் போது அரசு அதை ஒடுக்கக் கூடாது. மக்களுக்காகப் போராடி, உயிர்நீத்த தோழர் லீலாவதியின் பாதையில் அணிவகுப்போம். இவ் வாறு அவர் பேசினார்.இக்கூட்டத்திற்கு பகுதித் தலைவர் எஸ்.சாந்தி தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் எம்.சரஸ்வதி, துணைத் தலைவர் எஸ்.செல்வி, எம்.ஐஸ் வர்யா, எஸ். செல்வி, வி.செல்வி, டயா னா, எம். விஜயா உள்ளிட் டோர் பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: