சென்னை, ஏப். 25 -கடலுக்குள் உள்ள மணல் மேட்டை ராமர் பாலம் என்று கூறியும், அதை நினைவுச் சின்னமாக்க வேண்டும் என் றும் மதவெறியர்களும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் சேதுக்கால்வாய்த் திட்டத்தை முடக்க சதி செய்யும் நிலை யில், உச்சநீதிமன்றத்தில் சமீ பத்தில் நடந்த விசாரணை யின் போது மத்திய அரசு எந்த நிலைபாடும் இல்லை என்று கூறி கைகழுவ முயற்சித் திருப்பதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மையாகக் கண் டித்துள்ளது.இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாநிலக்குழு கூட் டம் ஏப்ரல் 19, 20 ஆகிய தேதி களில் விருத்தாசலம் நகரில் மாநிலத் தலைவர் செ.முத்துக் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
மாநிலச் செய லாளர் ஆர்.வேல் முருகன், பொருளாளர் எஸ். பாலா, நிர் வாகிகள் இல.சண்முகசுந்தரம், எஸ். லெனின், வை.ஸ்டா லின், பிரபாகரன், எம்.செந்தில், எஸ்.கே.சேகர், தமிழ்செல்வன், கடலூர் மாவட்டத் தலைவர் அமர்நாத் உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம் வருமாறு:தமிழகத்தின் 160 ஆண்டு கால கனவுத்திட்டமான சேதுக்கால்வாய்திட்டத்தை சீர்குலைக்கும் நோக்கோடு இந்துமத அமைப்புகள், சுப்பிர மணிய சுவாமி போன்றவர் களால், இராமர் பாலம் அங்குள் ளது என்றும் அதை தேசிய நினைவுச் சின்னமாக அறி விக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.ஆதம்பாலம் பகுதி மணல் மேடு தான் என அனைத்து விஞ்ஞானப் பூர்வமான ஆய்வு களும் தெரிவித்துள்ளன. இதே போல் உலகின் பல்வேறு நாடு களில் இதுபோன்ற மணல்திட் டுக்களை அகற்றி கால்வாய் கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பனாமா கால்வாய், சூயஸ்கால்வாய் போன்றவை இரண்டு கண்டங்களுக்கிடையே அமைக்கப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கதாகும்.தமிழகத்தில் பகுத்தறிவுப் பாசறை வழியில் ஆட்சியில் இருப்பதாக சொல்லும் முதல் வர் ஜெயலலிதாவும் தேசிய நினைவு சின்னமாக ஆதம் பாலத்தை அறிவிக்க வேண் டும் என்று கூறியிருப்பது, பெரி யார், அண்ணா, எம்ஜிஆர் ஆகி யோரின் சிந்தனைக்கும், கொள் கைக்கும் மட்டுமல்லாது, தமி ழக நலனுக்கும் விரோதமானது.அதேபோல் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர்களும், நாடாளு மன்ற உறுப்பினர்களும் இது குறித்து வாய் மூடி மௌனியாக இருப்பது தமிழகத்தின் தொழில் வளர்ச்சியையும், இளைஞர் களின் வேலைவாய்ப்பையும் குழிதோண்டி புதைப்பதாகும்.இந்நிலையில், தற்போது உச்சநீதிமன்ற விசாரணை யின்போது மத்திய அரசு எந்த வித பதிலையும் சொல்லாது, எந்த நிலைபாடும் இல்லை என கூறியிருப்பது வன்மை யாக கண்டிக்கத்தக்கது.
மதச் சார்பற்ற, தன்மை இந்திய சமூ கத்தின் ஆரம்ப வேர்களில் இருந்து இழையோடி இருக்கக் கூடிய நிலையில், மதத்தின் பெயரால் மக்களின் வாழ்வா தாரத் திட்டங்களை நாசம் செய் வதை ஜனநாயகத்திற்காக போராடும் எந்த அமைப்பு களாலும், நபர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே சமரசமில்லாமல் சேது சமுத்திரத் திட்டத்தை அமலாக்கிட உரிய நடவடிக் கைகளை இந்திய அரசும், தமிழ்நாடு மாநில அரசும் மேற் கொள்ள வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: