கடலூர், ஏப்.25-
மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத் தப்பட்டன.கடலூர்கடலூர் புதுப்பாளை யத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு நகர்க்குழு உறுப்பி னர் ஆர். ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்டச் செய லாளர் டி. ஆறுமுகம் நகரச் செயலாளர் வி. சுப்பராயன், நகர்க்குழு உறுப்பினர்கள் தன சிங், அப்துல்காதர், ஸ்டாலின், அமர்நாத், குமரகுரு உள்ளிட் டோர் பேசினர்.லாரன்ஸ் சாலை சுரங்கப் பாதைத் திட்டத்தை உடனடி யாக நிறைவேற்றக்கோரியும், அரசு மருத்துவமனை சீர் கேட்டைக் கண்டித்தும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.கூத்தம்பாக்கம்கடலூர் ஒன்றியம் கூத்தம் பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். தட்சணா மூர்த்தி தலைமை தாங்கினார்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். துரைராஜ், ஒன்றியச் செயலாளர் ஜே. ராஜேஷ் கண்ணன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் குமார், ஸ்ரீதர், அய்யாதுரை, அனந்த நாராயணன், தயாளன் உள் ளிட்டோர் பேசினர்.கடலூர் ஒன்றியத்துக்குட் பட்ட 51 ஊராட்சி மக்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். பாதிரிக் குப்பம் ஆதிதிராவிடர் பகுதி மக்களின் சுடுகாட்டு ஆக்கி ரமிப்பை அகற்றக்கோரியும், கெடிலம் ஆற்றில் ஊராட்சி, நகராட்சி குப்பைகளைக் கொட்டி, கழிவுநீரை ஊற்றி மாசு ஏற்படுத்துவதைத் தடுக் கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பண்ருட்டிபண்ருட்டி விஜயா தியேட் டர் எதிரே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு வட்டச் செய லாளர் வி. சேதுராமன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப் பினர் வி. முத்துவேல், நகரச் செயலாளர் வி. மோகன், மணி வண்ணன் உள்ளிட்டோர் பேசி னர். தானே புயலால் பாதிக்கப் பட்டுள்ள விவசாயிகளின் கடன் களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், இரண்டாவது பட்டி யல் நிவாரணத் தொகை யினை உடனடியாக வழங்க வேண் டும் போன்ற கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

Leave A Reply

%d bloggers like this: