சென்னை, ஏப். 25-புதுக்கோட்டைக்கு இடைத்தேர்தல் தேதி அறி விக்கப்பட்டுவிட்டது. அங்கு தேர்தல் நன்ன டத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. எனவே இனிமேல் புதுக்கோட் டைக்கு எந்தத் திட்டத்தை யும் தமிழக அரசு அறிவிக் கக் கூடாது என்று தலை மைத் தேர்தல் அதிகாரி பிர வீண்குமார் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:புதுக்கோட்டை சட்ட மன்றத் தொகுதி இடைத் தேர்தல் ஜூன் 12-ந் தேதி நடைபெறும் என்று இந் திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட் டம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக (ஏப்ரல் 24-ந் தேதி முதல்) அமலுக்கு வந் துள்ளன.
அதன் விவரம்:புதுக்கோட்டை மாவட் டத்திற்காக எவ்வித புதிய திட்டங்களையும் அறிவிக் கக்கூடாது. இந்த மாவட் டத்தில் புதிய பணிகளைத் தொடங்குவதோ, எந்தப் பணிக்காகவும் டெண்டர் விடுவதோ, டெண்டர் இறுதி செய்வதோ கூடாது. புதிய திட்டங்களை தொடங்குவதோ அல்லது அவற்றிற்காக அடிக்கல் நாட்டுவதோ கூடாது. தேர் தல் தொடர்பான அதிகாரி களை மாற்றுவதற்கும், நிய மிப்பதற்கும் தடை விதிக்கப் படுகிறது.புதுக்கோட்டை மாவட் டத்திற்கு செல்லும் மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் அலுவலகப் பணியுடன் தேர்தல் பணி யை சேர்த்து மேற்கொள் ளக்கூடாது. புதுக்கோட் டைக்கு அருகில் உள்ள மாவட்டங்களுக்கு அலு வலகப் பணிக்காக வரும் போதும், புதுக்கோட் டைக்குச் சென்று தேர்தல் பணியில் ஈடுபடக்கூடாது. தேர்தல் பணிக்காக அரசு வாகனங்களை பயன்படுத் தக்கூடாது. புதுக்கோட் டை தேர்தல் பணிக்காக செல்லும்போது ‘பைலட்’ கார்கள் அல்லது சுழல் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது.புதுக்கோட்டை மாவட்ட அதிகாரிகள் யாரும் ஆய் வுக்கூட்டம் நடத்தக் கூடாது. அரசு செலவில், சாதனைகளைச் சொல்லி விளம்பரம் எதுவும் செய்யக் கூடாது. அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் இலவச மாக எந்தப் பொருட்களை யும் வழங்க தடை விதிக்கப் படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் தொடர்பான எந்த பணி நியமனமும் மேற் கொள்ளக்கூடாது.
இந்த இடைத்தேர்தலில் செலவு கட்டுப்பாட்டு நடவ டிக்கைகளை கடுமையாக அமல்படுத்துவதற்காக பறக் கும் படைகள், நிலையான கண்காணிப்புப் படைகள் அமைக்கப்படும். புதுக் கோட்டை மாவட்டத்திற் குள் யாராவது ரூ.2 லட்சத் திற்கு மேற்பட்ட ரொக்கப் பணத்தை எடுத்துச் சென் றால் அதற்கு தேவையான ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட் டால் அந்தப் பணம் பறி முதல் செய்யப்படும். பிரச் சாரப் பணிக்கு கொடுப்பதற் காக குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் வைத்திருந் தால் அந்தப் பணமும் பறி முதல் செய்யப்பட்டு, சம்பந் தப்பட்டவர்கள் மீது சட் டப்படி நடவடிக்கை எடுக் கப்படும் என்று அவர் தெரி வித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: