கடந்த 2011 – 12 ஆம் நிதியாண்டில் பழங்கள்,காய்கறிகளின் உற்பத்தி 3 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் ஹரிஷ் ரவாத் நாடாளுமன்றத்திற்கு அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா, கடந்த 2011-12 ஆம் நிதி அளவின் அடிப்படையில் முறையே 775.25 லட்சம் டன் காய்கறிகளை உற்பத்தி செய்துள்ளது. முந்தைய 2010-11 ஆம் நிதியாண்டில் பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தி 748.78 லட்சம் டன் மற்றும் 1465.54 லட்சம் டன்னாக இருந்தது. இந்நிலையில் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி 2011-12 ஆம் நிதியாண்டில் சிறிது அதிகரித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டில் வெங்காயத்திற்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக அதன் விலை கிலோவுக்கு ரூ.85 வரை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: