புதுக்கோட்டை, ஏப். 25-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு அறி வியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் ஆகிய அமைப்புகள் இணைந்து கடந்த 22 ஆம் தேதி முதல் ஒருவார காலத்திற்கு மாவட் டத்தின் பல்வேறு பகுதி களில், பல்வேறு வடிவங் களில் உலக புத்தகதின விழாக்களைக் கொண் டாடி வருகின்றன. அத னொரு பகுதியாக புதுக் கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் திங்க ளன்று மாலையில் புத்தக சங்கிலி இயக்கம் நடைபெற் றது.
இதில் சாகித்ய அகா தெமியின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கவிஞர் தங் கம்மூர்த்தி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது, புத்தகங் களைப் பொறுத்தவரை அவை வெளிவந்த காலத்தை கணக்கில் கொள்ளத் தேவை யில்லை. தான் இதுவரை படிக்காத அனைத்துப் புத் தகங்களுமே புதியவைதான் என்றார்.இந்த புத்தக சங்கிலி இயக்கத்திற்கு தமுஎகச மாவட்டச் செயலாளர் ரமா.ராமநாதன் தலைமை வகித்தார். அறிவியல் இயக் கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.டி.பாலகிருஷ் ணன், மாவட்ட துணைத் தலைவர் அ.மணவாளன், இணைச் செயலாளர் எஸ். மஸ்தான்பக்ருதீன் ஆகி யோர் கருத்துரை வழங்கினர்.நிகழ்ச்சியினிடையே த.வி.வெங்கடேசன் எழுதிய “நவீன அறிவியலின் வளர்ச்சி” என்ற நூலை கவிஞர் தங் கம்மூர்த்தி வெளியிட, அறி வியல் இயக்க மாவட்டத் தலைவர் எல்.பிரபாகரன் பெற்றுக்கொண்டார்.

Leave A Reply

%d bloggers like this: