சேலம், ஏப்.25-சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றிய பெருந்தலைவரின் மக்கள் தொடர்பு அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினர். இதன் திறப்புவிழா நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கட்சியின் நங்கவள்ளி வட்டக்குழு அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்றது. பின்னர், மேட்டூர் வட்டம் புதுச்சாம்பள்ளியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் எம்.வெற்றிவேல் தலைமை தாங்கினார். நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பழ.ஜீவானந்தம் வரவேற்றார்.
இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறைப்புரையாற்றினார். மேலும், இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.தங்கவேலு, மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.தங்கவேலு மற்றும் கே.ராஜாத்தி, கே.ஆர்.வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். முன்னதாக, சேலம் மாங்குயில் கலைக்குழுவின் இயக்கப்பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: