கரூர், ஏப். 25- தேர்தல் ஆணையம் அமைத்து கூட்டுறவு தேர் தல்களை நியாயமான முறை யில் நடத்திட வலியுறுத்தி யும், அரசு காலிப் பணி யிடங்களை உடன் நிரப் பிடக்கோரியும் அரசா ணை 109ன் கீழ் பறிக்கப் பட்ட பணியிடங்களை மீண்டும் வழங்கிடவும், அர சின் திட்டங்களில் அரசியல் தலையீடு மற்றும் உயர் அலுவலர் அச்சுறுத்தல் களை தடுத்து நிறுத்திடவும் வலியுறுத்தி தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் கரூர் கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டத் தலைவர் சி.குழந்தைவேலு தலைமை வகித்தார்.
தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத் தின் கரூர் மாவட்டத் தலை வர் வி.மோகன்குமார், மாவட்டச் செயலாளர் எம். சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட் டப் பொருளாளர் மகா விஷ்ணன், மாநில செயற் குழு உறுப்பினர் பொன் ஜெய ராம், மாவட்ட துணைத் தலைவர் பழ.நாகராஜன், அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் மாவட்ட தலை வர் சுரேஷ்குமார், ஆய்வக தொழில் நுட்ப சங்கத்தின் மாநிலச் செயலாளர் செல்வ ராணி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி சடையாண்டி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். வட்ட நிர்வாகிகள் பாலமுருகன், அங்கமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: