இந்தியாவின் தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளுக்குத் தர வேண்டிய கடனின் அளவு 14 ஆயிரத்து 573 கோடி ரூபாய் என்று மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்தத் தகவலை மத்திய நிதித்துறை துணையமைச்சர் நமோ நாராயண் மீனா மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் குறிப்பிட்டார். இந்தக் கடனில் நஷ்டத்தில் இயங்கி வரும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களின் கடன் மட்டும் 80 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடும் நெருக்கடியில் இருக்கும் விஜய் மல்லையாவின் கிங் பிஷர் நிறுவனத்தை விட, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்தான் அதிகமாக பொதுத்துறை நிறுவனங்களுக்கு பாக்கி வைத்திருக்கிறது. இந்தக் கடன்கள் திரும்ப வருமா என்ற கேள்வியும் எழும்பியிருக்கிறது. அதற்கு ஆட்சியாளர்களிடம் இருந்து எந்தவிதமான பதிலும் இல்லை.

Leave A Reply