டியாத்தம், ஏப்.25-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் தட்டப் பாறை ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜி. மெய்ஞானம் தலைமையில் உழவர் பெருவிழா நடை பெற்றது. துணைத் தலைவர் வி. குமரவேல் வரவேற்றார். சிறப்புரையாக வேளாண் இணை இயக்குநர் பாலசுப்பிர மணியன் மற்றும் வேளாண் துறையைச் சேர்ந்த வீ. எல்லப்பன், கு. நெப்போலியன், பி. சுமதி, எம்.எஸ். இன்பராஜன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் சி.ஏ. ஏகாம்பரம், ஆத்மா குழுத் தலைவர் டி. தாமோதரன் ஆகியோர் பேசினார்கள். இதில் மண் மாதிரி எடுத்தல், விதை நேர்த்தி, வாழைக் கன்று நேர்த்தி, தென்னை வேர்மூலம் மருந்து செலுத்துதல், பார்த்தீனியம் ஒழிப்பு, எலி ஒழிப்பு ஆகி யவை குறித்து செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. விழாவில் மருத்துவர் பொ. சுஜாதா வேளாண்மை உதவி இயக்குநர் நன்றியுரை கூறினார். விழாவில் 300க்கும் அதிகமான விவசாயிகளுக்கு அறு சுவை உணவு வழங்கப்பட்டது.
18 மணிநேர மின்வெட்டு!விவசாயிகள் கொந்தளிப்பு
விழுப்புரம், ஏப். 25-
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் ஒலக்கூர் கிராமத்தில் 18 மணிநேர தொடர் மின்வெட் டால் விவசாயிகள் கொதித்துப் போயுள்ளனர். இதைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வெட்டால் குடிநீர் தட்டுப்படுகிறது என வே அப்பகுதி மக்களுக்கு குடிநீருக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. வேளாண்மை துறையில் நடைபெறும் முறைகேட்டை தடுக்கவேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை பொருளாளர் வீரராகவன் தலைமை தாங்கினார். துரைக்கண்ணு முன் னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் என்.சுப் பிரமணியன் , அழகுசீலன் , சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: