திருச்சிராப்பள்ளி,ஏப்.25.சத்துணவு ஊழியர் களுக்கு ஊதியக்குழு பரிந் துரைத்த ஊதியம் வழங்க வேண்டும், மாதாந்திர ஓய் வூதியம் வழங்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சத்துணவுக்கு செலவினங் களை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி புத னன்று மாநிலம் முழுவதும் 7 மண்டலங்களில் தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங் கத்தினர் உண்ணாவிரதம் இருக்க முடிவுசெய்தனர். திருச்சி ஜங்சன் காதி கிராப்ட் அருகில் உண்ணா விரதம் இருக்க போலீசா ரின் அனுமதி பெற்றிருந்த னர். இதற்காக செவ்வா யன்று அங்கு பந்தல் அமைக்கும் பணியில் ஈடு பட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் அனுமதி ரத்துசெய்யப் பட்டதாகக் கூறினர்.
ஆனால் சத்துணவு ஊழி யர்கள் புதனன்று அறிவித்த படி அங்கு கூடினர். இதை யறிந்து அங்கு வந்த கண் டோன்மென்ட் போலீசார் அவர்களை கலைந்து செல் லும் படி கூறினர். ஆனால் சத்துணவு ஊழியர்கள் தடையை மீறி உண்ணாவிர தம் இருக்க முயன்றனர். இதையடுத்து உண்ணா விரதம் இருக்க முயன்ற சத் துணவு ஊழியர் சங்க மாநி லச் செயலாளர் ஆண்டாள், மாவட்ட தலைவர்கள் திருச்சி தங்கவேல், கரூர் வேம்புசாமி, அரியலூர் செல்வராஜ், பெரம்பலூர் செல்லப்பிள்ளை, கரூர் மாவட்டப் பொருளாளர் பழனியம்மாள், திருச்சி மாவட்டத் துணைத் தலை வர் எலிசபெத்ராணி உள் பட சுமார் 100பேரை போலீ சார் கைது செய்தனர். முன்னதாக உண்ணா விரத போராட்டத்தை வாழ்த்தி அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் ஜெயராமன், பெரம் பலூர் மாவட்டத் தலைவர் ஆள வந்தான், மாவட்டச் செய லாளர் ராஜ்பாபு, சண்முக துரை, ரபியுதீன், கல் யாண ராமன், சாவித்திரி , ஏ. பெரி யசாமி ஆகியோர் பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: