புதுதில்லியில் நடைபெறும் யோனெக்ஸ் சன் ரைஸ் இந்தியா ஓபன் பேட்மின்டன் தகுதிப்போட்டிகளில் ஆடவர்கள் தோல்வி அடைந்தனர். இரு மகளிர் தகுதி பெற்றனர்.மகளிர் தகுதிப்போட்டிகளின் முதல் சுற்றில் அருந்ததியும் மோகிதாவும் எதிரிகள் வராததால் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர். நேஹா 21-11, 11-2 என்ற புள்ளிகளில் திருப்தி முர்குன் டேயை வீழ்த்தினார். சாயாலி கோகலே, பி.சி.துளசி ஆகியோர் தோற்றனர்.இரண்டாம் சுற்றில் அருந்ததி சுவிட்சர்லாந்தின் சபரினா ஜேக்கெட்டை 19-21, 21-13, 21-18 என்ற புள்ளிகளில் வென்று முக்கிய சுற்றுக்கு தகுதிபெற்றனர். முதல் சுற்றில் வென்ற மோகிதா சச்தேவும் நேஹா பண்டிட்டும் மோதினர்.
இதில் நேஹா 21-17, 22-24, 21-14 என வென்று முக்கிய சுற்றுக்கு முன்னேறினார்.ஆடவரில் ஏழு வீரர்கள் தகுதிப்போட்டிகளில் பங்கேற்றனர். அனைவரும் தோற்றனர். முதல் சுற்றில் அட்சித் மகாஜன், கே.நந்தகோபால், எச்.எஸ்.பிரன்னாய் கே.ஸ்ரீகாந்த் ஆகியோர் தோற்றனர். இரண்டாவது சுற்றில் சமீர் வர்மா, ஆனந்த் பவர், ரோகித் யாதவ், சாய் பிரனீத் ஆகியோர் தோற்றனர்.மகளிர் இரட்டையர் போட்டிகளில் இந்திய இணை ஜூவாலா கட்டா – அஸ்வினி பொன்னப்பா ஆகியோர் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர். அவர்களை எதிர்கொள்ள வேண்டிய ஹாங்காங்கைச் சேர்ந்த லோக் யான் பூன்-யிங் சுயட்டிசே இணை போட்டியிலிருந்து விலகிக்கொண்டது.

Leave A Reply

%d bloggers like this: