கோரிக்கைகளை வென்ற உறுதிமிக்க போராட்டம்மலைவாழ் இளைஞர் சங்கம் பாராட்டு
சென்னை, ஏப். 25 -பழங்குடி மக்களின் கோரிக்கைகளுக்காக சென்னை யில் நடைபெற்ற மாபெரும் முற்றுகைப்போராட்டத்தில் உறுதியோடு பங்கேற்ற பழங்குடி மக்களுக்கும் மலைவாழ் இளைஞர்களுக்கும் தமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கம் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளது.இனச்சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைமையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் செவ்வாயன்று மாபெரும் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், கோரிக்கைகள் அரசால் ஏற்கப் படும் வரை உறுதியோடு பங்கேற்ற அனைத்து மலைவாழ் மக்களுக்கும், பெருவாரியாக பங்கேற்ற பழங்குடி இளைஞர்களுக்கும் தமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கம் வாழ்த்தும் பாராட்டும் தெரிவிப்பதாக சங்கத்தின் மாநில அமைப்பாளர் ச.லெனின் தெரிவித்துள்ளார்.
—–
ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் முறைகேடு
புதுதில்லி, ஏப் 25-இத்தாலிய நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடமிருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்கிய விவ காரத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது குறித்து விசா ரணை நடத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. முறை கேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும். விதி முறைகள் மீறப்பட்டிருப்பது நிரூபணமானால் சட்டப் படி நட வடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச் சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாதுகாப் புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, ஹெலிகாப்டர் கொள்முதல் விவகாரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என்ற புகார் தீவிரமாக விசாரிக்கப்படும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: