காரைக்காலில்8 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு
காரைக்கால், ஏப்.25-காரைக்காலில் பன்றிக் காய்ச்சல் நோயினால் எட்டு நபர்கள் பாதிக்கப் பட்டிருப்பது தெரியவந் துள்ளது. அந்த நபர்களுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. காரைக்காலில் உள்ள அனைத்து ஆரம்ப சுகா தார மையங்களிலும் சமு தாயக் கூடங்களிலும் நல வழிமையங்களிலும் அரசு பொதுமருத்துவமனை மற்றும் மக்கள் கூடும் இடங்களிலும் பன்றிக் காய்ச்சல் நோயின் அறி குறிகள், இந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு துண்டுபிர சுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. காரைக்காலில் அரசு பொதுமருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்காக தனி மருத்துவப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் ஜூரம், உடல்வலி, வயிற் றுப்போக்கு, இருமல், வாந்தி, தொண்டைவலி, சோர்வு, முச்சுவிடுதல் சிரமம், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு பொது மருத்துவமனையை அணு குமாறு கேட்டுகொள்ளப் படுகிறார்கள். எனவே பொதுமக்கள் இந்நோய் பற்றி அச்சப்படாமல் பாதுகாப்பு வழிமுறை களை கடைப்பிடிக்கு மாறு கேட்டு கொள்ளப் படுகிறது.
—–
தஞ்சை மாவட்டத்தில் கோடைக்கால விளையாட்டுபயிற்சி முகாம்
தஞ்சாவூர், ஏப்.25-தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டுத் துறை சார் பாக பள்ளியில் பயிலும், மாணவ, மாணவிகளுக்கு 30.4.2012 முதல் 20.5.2012 வரை அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை 21 நாட்களுக்கு கோடைக் கால பயிற்சி முகாம் நடை பெறவுள்ளது. இம்முகாமில் தட களம், கூடைப்பந்து, கால் பந்து, ஹாக்கி, வாலிபால் மற்றும் பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுவதால் 16 வயதிற்குட் பட்ட பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பங் கேற்று சான்றிதழ்கள் பெற்று பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கா.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
—–
நாகூர் தர்கா விழா : மே 2 நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
நாகப்பட்டினம், ஏப்.25-நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் கந்தூரி திருவிழா ஏப்ரல் 22ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதையொட்டி வரும் 2ம்தேதி புதன் கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படு கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு நாள் உள்ளூர் விடு முறை என மாவட்ட ஆட் சித்தலைவர் து.முனு சாமிஅறிவித்துள்ளார்.2ம்தேதி உள்ளூர் விடு முறையானாலும் 1881ஆம் ஆண்டு செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் வரப் பெறாததால் மாவட்டக் கருவூலம் மற்றும் சார் நிலைக்கருவூலங்கள் அரசு வேலை நிமித்தம் காரண மாகக் குறைந்த எண்ணிக் கை ஊழியர்களைக் கொண்டு செயல்படும்.அந்த விடுமுறையினை ஈடு செய்யும் பொருட்டு, 12ம் தேதி சனிக்கிழமை அன்று நாகப்பட்டினம் மாவட்ட அனைத்து அர சுத்துறை அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங் கள் வேலை நாளாக இயங் கும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள் ளார்.

Leave A Reply

%d bloggers like this: