விழுப்புரம், ஏப். 25-
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் தனியார் சாராய ஆலையில் பணி புரிந்த பெண்ணின் மீது ஆசிட் கொட்டியதால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனு மதிக்கப்பட்டுள்ளார். அவரை விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப் பினர் ஆர்.ராமமூர்த்தி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.தொடர் மின்வெட்டால் விவசாயக் கூலிதொழிலா ளர்கள் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய சிலர் இந்த தனியார் சாராய ஆலைக்கு தினக்கூலி முறையில் வேலைக்கு செல் கின்றனர். அஞ்சு(17) என்ற பெண் செவ்வாய்கிழமை வேலை செய்து கொண் டிருந்தார்.
அப்போது சாராய ஆசிடை வாகனத் தில் ஏற்றி வரும்போது, அஞ்சு மீது ஆசிட் கொட் டியுள்ளது. இதனை அடுத்து அஞ்சு முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத் துவமனைக்கு சேர்க்கப்பட் டார்.பாதிக்கப்பட்ட அஞ் சுவை புதன்கிழமையன்று (ஏப். 25) ஆர். ராமமூர்த்தி எம்எல்ஏ நேரில் சென்று பார்த்தார். அஞ்சுவிற்கும், இவரது பெற்றோர்களுக் கும் ஆறுதல் கூறினார். மருத் துவர்களிடம் அஞ்சு விற்கு தேவையான சிகிச்சை அளிக்கவேண்டும் என கூறினார். இச்சம்பவம் பற்றி ஆர். ராமமூர்த்தி எம்எல்ஏ கூறு கையில் “தனியார் ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை நிர்வாகம் பல்வேறு மோசடிகளை செய்து வருவதை கண்டித்து இதனை தடுக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கரும்பு வெட்டும் தொழிலா ளர் சங்கமும் பல கட்ட போராட்டங்களை நடத் தியுள்ளது. தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியரி டம் மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை நடவடி க்கை இல்லை என் பது வேதனைக்குரியது” என் றார். பாதிக்கப்பட்ட அஞ்சு விற்கு எந்தவிதமான நிவார ணமும் வழங்க தனியார் ராஜஸ்ரீசர்க்கரை ஆலை முன்வரவில்லை. சாராய ஆலையை தனியாரிடம் ஒப் பந்தம் செய்துள்ளதால் தங் கள் நிர்வாகத்திற்கும் ஒப்பந்த தாரர்களுக்கும் சம்பந்தம் இல்லை. என்று ஆலை நிர் வாகம் கூறுகிறது.சாராயஆலை ஒப்பந்த தாரார்களை சட்டவிதிப்படி ஒப்பந்தம் செய்யவில்லை எனவே அவர்களிடம் எப் படி சட்டரீதியாக நிவார ணம் கோர முடியும். எனவே சர்க்கரை ஆலை நிர் வாகம் தான் அஞ்சுவிற்கும் அவரது குடும்பத்திற்கும் உரிய நிவார ணம் வழங்க வேண்டும் என் றும் ராமமூர்த்தி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: