இங்கிலாந்து கால்பந்து லீக் சாம்பியன் அணிகளில் ஒன்றான செல்சியா அணி ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் லீக் இறுதி ஆட்டத்தில் நுழைந்துள்ளது.சாம்பியன் லீக் போட்டிகளின் அரை இறுதியில் ஸ்பெயினின் பார்சலோனா அணியும், இங்கிலாந்தின் செல்சியா அணியும் மோதின. இங்கிலாந்தில் நடந்த முதல் அரை இறுதியில் செல்சியா 1-0 என வென்றிருந்தது. இரண்டாவது அரை இறுதியில் பார்சலோனாவின் இரண்டு கோல்களை செர்ஜியோ பஸ்கட், ஆண்ட்ரஸ் இனியஸ்டா ஆகியோர் அடித்தனர்.போட்டி பார்சலோனாவுக்கு செல்கிறது என்பதை அறிந்த செல்சியா தீவிரமாக ஆடியது. முதல்பாதி முடியும் வேளையில் ராமிரஸ் அதன் முதல் கோலை அடித்தார். லம்பார்ட் தூக்கிபோட்ட பந்து பார்சலோனாவின் தற்காப்புக்குப்பின் விழுந்தது. அதை எதிர்பார்த்த ராமிரஸ் தற்காப்பு வளையத்தை சுற்று ஓடி கோல் அடித்தவுடன் செல்சியாவுக்கு உயிர்வந்தது.
ஆட்டம் மொத்தக் கோலில் சமன் ஆனாலும், அன்னிய மைதானத்தில் அதிக கோல்போட்ட அணி என்று செல்சியா இறுதிக்குச் சென்றிருக்கும்.இரண்டாம் பாதியில் பார்சலோனாவுக்கு பெனால்டி கிடைத்தது. மெஸ்ஸி அடித்த பெனால்டி உதை கோல் கம்பத்தில் பட்டு திரும்பியது. அதற்குப்பின் பார்சலோனா வீரர்கள் செல்சியா பகுதிகளில் கிட்டத்தட்ட முகாமிட்டு விட்டனர். செல்சியா தலைவர் டெர்ரி அபாயமான விளையாட்டுக்காக வெளியில் அனுப்பப்பட்டார். பத்து பேருடன் செல்சியா தாக்குப்பிடித்தது.ஆட்ட நேர இறுதியில் பெர்னாண்டோ டார்ரஸ் அடித்த இரண்டாவது கோலின் உதவியோடு செல்சியா போட்டியைச் சமன் செய்தது. இரு அரை இறுதிகளின் மொத்தக் கணக்கில் செல்சியா 3-2 என வெற்றிபெற்று இறுதிக்குச் சென்றது.

Leave A Reply

%d bloggers like this: