கிருஷ்ணகிரி, ஏப். 25-
சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு பணி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்களன்று (ஏப்ரல் 23) துவங்கியது. 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ள இப்பணி மாவட்ட ஆட்சியர் சி.என்.மகேஸ்வரன் வீட்டிலிருந்து துவக்கப்பட்டது. கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர் கள் மாவட்ட ஆட்சியரின் மாளிகைக்கு வந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் சொத்து விவரங்கள் சமூக பின் னணி குறித்த கேள்விகளை கேட்டு கையடக்க கணினி யில் பதிவு செய்து கொண்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக் கள் அனைவரும் தங்களைப்பற்றிய சரியான தகவல் களை அளித்து ஒத்துழைக்க வேண்டும் என்று கேட் டுக்கொண்டார். தொடர்ந்து 40 நாட்கள் நாடு முழு வதும் இப்பணி நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்கள் 6 பேரூராட்சிகள் 2 நகராட்சிகளின் பகுதி களை 3 ஆயிரத்து 543 வட்டாரங்களாக பிரித்து இப் பணி மேற்கொள்ளப்படுகிறது. 903 பணியாளர்களும் 156 மேற்பார்வையாளர்களும் கையடக்க கணினி மூலம் ஒவ்வொரு குடுப்பத்தின் விவரங்களையும் பதிவு செய் வார்கள். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் பற்றிய விவரங்களை கண்டறிய இந்த கணக்கெடுப்பு நடத்தப் படுவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: