புதுதில்லி, ஏப். 25-கோவையில் உலகத்தரம் வாய்ந்த மத்தியப் பல்கலைக் கழகம் நிறுவிட உரிய நட வடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை தொகுதி மக்க ளவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கோரினார்.நாடாளுமன்ற பட் ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அவசரப் பொது முக்கியத் துவம் வாய்ந்த பிரச்சனை களை எழுப்பும் நேரத்தில், பி.ஆர். நடராஜன் பேசிய தாவது:“நாடு முழுதும் பதினோ ராவது ஐந்தாண்டுத் திட் டத்தில் உலகத்தரம் வாய்ந்த, பல்கலைக்கழகங்கள் பதி னான்கை நிறுவிட, மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
இது தொடர்பாக பல் கலைக்கழக மானியக்குழு வால் அமைக்கப்பட்ட வல் லுநர் குழுவும் இவ்வாறான மத்தியப் பல்கலைக்கழகங் கள் அமைத்திட 14 மாநி லங்களை அடையாளம் கண்டது. இதனை மத்திய மனிதவள வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் சார்பில் அமைச்சர் நாடாளுமன் றத்தில் 2009க்கும் 2011க்கும் இடையே நாடாளுமன்றக் கேள்விகள் பலவற்றிற்கு அளித்துள்ள பதில்களும் உறுதிப்படுத்தியுள்ளன. அவ்வாறு தெரிவு செய் யப்பட்ட 14 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தமிழ் நாடு மாநிலத்தில், இப்பல் கலைக்கழகத்தை நிறுவிட கோயம்புத்தூர் நகரம் அடையாளம் காணப்பட் டிருக்கிறது. கோவையிலும் கோவையைச் சுற்றிலும் எண்ணற்ற புகழ்பெற்ற வல்லுநர்கள், மாணவர் சமுதாயம், தொழில் அதிபர் கள், சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங் கள் தங்கள் நடவடிக்கை களை விரிவுபடுத்தி, செயல் பட்டுக் கொண்டிருக்கிறார் கள். இத்தகையதொரு உல கத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகத்தை நிறுவுவதில் தாமதம் செய்வதென்பது, தொழில்நுட்ப வளர்ச்சியை அதிகரித்துக்கொள்ள ஆவ லுடன் இருந்திடும் இளை ஞர்கள் மற்றும் அறிஞர்கள் மத்தியில் இருந்து வந்த ஆர் வத்தைக் குலைத்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் முதன்மை யான, முக்கியமான நகரங்க ளில் ஒன்று. இதனைச் சுற்றி எண்ணற்ற கல்வி நிலையங் களும், தொழிற்சாலைக ளும் இயங்கி வருகின்றன. இவ்வாறான இடத்தில் உல கத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகத்தை நிறுவுவதென் பது தென்னிந்தியாவின் முகத் தோற்றத்தையே மாற் றியமைத்திடும்.பதினோராவது ஐந் தாண்டுத் திட்டக்காலத்தில், மத்திய அரசு இதற்காக 1750 கோடி ரூபாய் ஒதுக்கியிருப் பதாகப் பதிவுருக்களைப் பார்வையிடுவதிலிருந்து புலப்படுகிறது. பதினோரா வது ஐந்தாண்டுத் திட்டமே 2011-12ஆம் ஆண்டில் முடி வடையக்கூடிய நிலையில், இத்திட்டத்தின் முதல் நான் காண்டுகள் முடிவுற்ற பின் னரும்கூட, இதற்காக கோவையில் ஓர் இடத்தை அடையாளம் காணக்கூட, உருப்படியான நடவடிக்கை எதுவும் அரசால் எடுக்கப் படவில்லை.எனவே, மேலும் காலதா மதம் எதுவும் செய்யாமல், உலகத் தரம் வாய்ந்த மத்தி யப் பல்கலைக் கழகத்தை, தமிழக அரசின் கலந்தாலோ சனையுடன், கோவை மாந கரில் நிறுவிட, மத்திய அரசு உரிய நடவடிக்கை கள் எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன்.இவ்வாறு பி.ஆர். நட ராஜன் கோரினார். (ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: