சென்னை,ஏப். 25-
சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள அண்ணா நகரில் குடிநீர்குழாய் இணைப்பு வழங்கும் பணியில் ஈடு பட்டிருந்த ஒப்பந்த தொழிலாளி வி.பழனிசாமி செவ் வாயன்று மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.சென்னை வண்ணாரப்பேட்டை பகுதி அலுவலகம் 4, டெப்போ 41ல் ஒப்பந்த தொழிலாளியாக வி.பழனிசாமி பணி செய்து வந்தார்.. அவரது வயது 36. இவருக்கு ஜீவ ஜோதி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள் ளனர். குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தில் நிரந்தர மின்தொழிலாளியை கொண்டு செய்ய வேண்டிய இப்பணியை மெட்ரோ அதிகாரிகளின் உத்தர வால் எந்த பாதுகாப்பு உபகரணங்களுமின்றி செய்ய நிர்பந் திக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அன்பழகன் தெருவில் குடிநீர் இணைப்பு கொடுத் துக்கொண்டிருந்தபோது அருகில் உள்ள பழுதடைந்த மின் கம்பியால் அதிர்ச்சிக்குள்ளானார். இதனால் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். மெட்ரோ அதிகாரிகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த இச்சம்பவத்தை சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் கழிவுநீர் அகற்று வாரிய தொழிலாளர் சங்கம் (சிஐடியு) கண்டித்துள்ளது. மேலும், உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், அவரது மனை விக்கு நிரந்தரத் தன்மையுள்ள பணியை வழங்க வேண்டும், குடிநீர் இணைப்பு பணியில் ஒப்பந்த தொழிலாளர்களை பயன்படுத்தக்கூடாது. அலட்சியம் காட்டிய மெட்ரோ அதிகாரிகள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க 27.4.12 காலை வண்ணாரப் பேட்டையில் உள்ள பகுதி அலுவலகம் 4 முன்பு சங்கச் செயலாளர் எம்.பழனி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெறவுள்ளதாக துணைத்தலைவர் என்.கிருஷ்ணன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply