கிருஷ்ணகிரி, ஏப். 25 –
சமூக பாதுகாப்பு சட்டங் களின் பயனாளிகள் காவல் நிலையங்களுக்கு செல்ல தயங்கும் நிலையை போக்க வேண்டும். நம்பிக்கையுடன் காவல்நிலையங்களுக்கு பொதுமக்கள் செல்லும் நில மையை ஏற்படுத்த வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி கே.பெரு மாள் கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் ஒரு நாள் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் செவ்வாயன்று (ஏப்ரல் 24) நடைபெற்றது. மாவட்ட ஆட் சியர் சி.என்.மகேஸ்வரன் தலைமை தாங்கினார். குடும்ப வன்முறையிலிருந்து பெண் களை பாதுகாக்கும் சட்டம்-2005 வரதட்சணை தடுப்பு சட்டம்-1961 குழந்தை திரு மண தடைச்சட்டம்-2006 பெற் றோர் மற்றும் மூத்த குடிமக் களின் நலன் பேணிக்காத்தல் மற்றும் பராமரிப்பு சட்டம்-2007 இளைஞர் நீதித் திருத்திய சட்டம் ஆகிய தலைப்புகளில் மாவட்ட முதன்மை நீதிபதி கே.பெருமாள் பேசினார்.

Leave A Reply

%d bloggers like this: