அம்பத்தூர், ஏப்.25-
பட்டாபிராம் திருவள்ளுவர் நகர் பாரதியார் தெருவில் வசிப்பவர் சீனிவாசன். இவர் கூலி வேலை செய்து வரு கிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 3 குழந்தை கள். இவர்களுக்கு இடையில் அடிக்கடி தகராறு நடை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் திடீரென லட்சுமி கடந்த 8ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். தனது மனைவியை காண வில்லை என பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் விசாரணை நடத்தி லட்சு மியை மீட்டு சீனிவாசனிடம் ஒப்படைத்தனர். லட் சுமி தனக்கு விவாகரத்து தரும்படி சீனி வாசனிடம் கேட் டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் மனைவி யின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

Leave A Reply