புகையிலைப் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதித்ததைப் போலவே, மது அருந்துவதற்கும் பல்வேறு வகையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று உலக சுகாதாரக் கழகத்தை இந்தியா கேட்டுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க உலக சுகாதாரக்கழகம் முயற்சி செய்து ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை நிறைவேற்றியது. 2003 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி கையெழுத்தான இந்த ஒப்பந்தம், 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி27 அன்று நடைமுறைக்கு வந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றிலேயே, அதன் அல்லது அதன் துணை அமைப்பு ஒன்றின் ஒப்பந்தம் மிகவும் நல்ல முறையில் நடைமுறைக்கு வந்தது இந்த விஷயத்தில்தான் என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு இது அமலானது. இதுபோன்ற ஒரு சர்வதேச ஒப்பந்தம் மது அருந்தும் பழக்கத்தை கட்டுப்படுத்தவும் தேவை என்கிறது இந்தியா. இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 3.2 லட்சம் 15 முதல் 29 வயதுக்குட்ட இளைஞர்கள் மதுப்பழக்கத்தால் உயிரிழக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply