தில்லி டேர் டெவில்ஸ் அணித்தலைவர் வீரேந்திர சேவக் ஒற்றை வீரராய் நின்று புனே அணியைத் தோற்கடித்தார்.முதலில் ஆடிய புனே வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் எடுத்தது. தில்லி அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 16 ஓவர்களில் 148 ஓட்டங்களை எடுத்து வென்றது.ஒற்றை ஓட்டத்தில் இரண்டு விக்கெட்டுகளை பலிகொடுத்த புனே அணியை மனீஷ் பாண்டேயும், ராபின் உத்தப்பாவும் நிலைப்படுத்தி ஓட்டங்களைக் குவித்தனர்.
பாண்டே 80 ஓட்டங்களும், உத்தப்பா 60 ஓட்டங்களும் எடுத்தனர். பதானும் மோர்கெல்லும் 1 விக்கெட்டை கைப்பற்றினர். புனே அணி 146 ஓட்டங்கள் எடுத்தது.அடுத்து ஆடிய தில்லி அணியின் முதல் விக்கெட் (மகிளா ஜெயவர்த்தனே) ரன் அவுட் மூலம் கிடைத்தது. பீட்டர்சனும் சேவக்கும் இணைந்து 89 ஓட்டங்களைச் சேர்த்தனர். பீட்டர்சன் ஆட்டமிழந்தவுடன் வந்த ரோஸ் டெய்லர் 9 ஓட்டங்கள் எடுத்தார்.தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய வீரேந்திர சேவாக் 48 பந்துகளில் 87 ஓட்டங்கள் எடுத்தார். சேவக்கின் அதிரடி ஆட்டத்தின் பலனாக நான்கு ஓவர்கள் எச்சத்தில் தில்லி அணி வென்றது.சேவக் 48 பந்துகளைச் சந்தித்து பத்து நான்குகளும் மூன்று ஆறுகளும் அடித்தார். தில்லி அணி எட்டு விக்கெட்டுகளில் வென்றது.

Leave A Reply

%d bloggers like this: