கோவை,ஏப்.25-கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளராக ஆர்.கோபால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழுக் கூட்டம் செவ்வாயன்று சிவானந்தபுரம் ஆர்.வெங்கிடு நினைவகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.விஜயலட்சுமி தலைமை வகித்தார். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சி.கருணாகரன், யு.கே.சிவஞானம் ஆகியோரும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.கோபால், கே.சண்முகம் மற்றும் 16 பேர் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் ஒன்றியச் செயலாளராக ஆர்.கோபால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக கடந்த 2011 ம் ஆண்டு நவம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில் சத்தி சாலை கரட்டுமேட்டில் நடைபெற்ற 20 வது சிபிஎம் ஒன்றிய மாநாடு வி.இராமமூர்த்தியை செயலாளராக தேர்வு செய்தது. பின்னர். 2011 டிசம்பர் 31, 2012 ஜனவரி 1 மற்றும் 2 ம் தேதிகளில் கவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற கோவை மாவட்ட 20வது மாநாட்டில் வி.இராமமூர்த்தி மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். எனவேதான் எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற்கு புதிதாக செயலாளர் தேர்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

%d bloggers like this: