திருவள்ளூர், ஏப்.25-
எட்டாம் வகுப்புவரை படித்தால்தான் பேட்ஜ் தரப் படும் என்ற சட்டத்தை திரும் பப்பெற வேண்டும் என ஆட்டோ தொழிலாளர் சங் கம் (சிஐடியு) வலியுறுத் தியுள்ளது.திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்க 7வது மாவட்ட மாநாடு சோழவரத்தை அடுத்த காந் திநகரில் மாவட்டத் தலை வர் ஏ.ஜி. சந்தானம் தலைமை யில் செவ்வாயன்று (ஏப்.24) நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் இ. குமார் கொடியேற்றினார். ஒன் றியச் செயலாளர் ஏ. கரி முல்லா, மாவட்டச் செயலா ளர் எம். சந்திரசேகரன் ஆகி யோர் வேலை அறிக்கையை வாசித்தனர். ஆட்டோ சங்க மாநிலத் தலைவர் எம். சந் திரன் துவக்க உரையாற் றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. ஆறுமுகம், மாவட்டப் பொருளாளர் ஆர். பூபாலன், தையல் சங்க மாவட்டத் தலைவர் பி. நடேசன், ஆட்டோ சங்க மாநிலக் குழு உறுப்பினர் ஏ. பழனி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
ஆட்டோ சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் பா. அன்பழகன் நிறைவுரையாற்றினார். மாவட்ட தலைவராக ஏ.ஜி. சந்தானம், மாவட்டச் செயலாளராக எம். சந்திர சேகரன், பொருளாளராக எஸ். தீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள்:எச்ஐவி பரிசோதனைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், விபத்து நடந் தால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யும் சட்டத்தை திரும் பப் பெற வேண்டும், நல வாரியத்தில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும், சாதாரண இறப்பிற்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும், ஆர்டிஓ அலுவலகத்தில் விண்ணப்பங்கள் தமிழில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: