வேலூர், ஏப். 25-
வேலூர் அடுத்த அரியூர் விசுவநாதன் நகர் பகுதியில் கடந்த 1993ஆம் ஆண்டு தலித் மற்றும் பழங்குடி மக் களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க 57 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட் டுள்ளது. ஆனால் பட்டா வழங்கப்படவில்லை. வரு வாய்துறை ஆதிதிராவிடர் களுக்கு ஒதுக்கிய இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித் துள்ளனர்.வேலூர் மாநகராட்சி 58வது வார்டு பகுதியை சேர்ந்த (சர்வே எண் 110/1பி, 111/2 பி) இந்த நிலப்பகுதி, வீடில்லா ஆதிதிராவிடர் களுக்கு நலத்துறை யினர் பட்டா வழங்க திட்டமிருந் தனர்.
ஆதிதிராவிட நலத் துறை கடந்த 19 ஆண்டுக ளாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வீண் கால தாம தம் செய்தனர். இதனால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் பயன் படுத்த வேண்டிய இடத்தில் வருவாய்த்துறை அதிகாரி கள் துணை கொண்டு கடந்த 2008ஆம் ஆண்டு அரசு வேறு ஒரு தனி நபர் பெயருக்கு 11.6.2008ல் வேலூர் மாவட்ட பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர் என்று அரசு நிலத்தை சர்வே எண்ணை மாற்றி பதிவு செய் துள்ளனர். இது அதிகாரி கள் உதவியில்லாமல் நடந் திருக்க முடியாது. எனவே, அரியூர் மலைக்கோடி பகுதி யில் பல ஆண்டுகாலமாக பட்டா கேட்டு காத் திருக்கும் ஏழை எளிய ஆதி திராவிடர் குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி மலைக்கோடி அரியூர் கிளைச் செயலாளர் எம். மாணிக்கம், சரோஜா ஆகியோர் மாவட்ட ஆட் சியரிடம் மனு அளித்தனர்.மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சி யர் அஜய் யாதவ், மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தர வள்ளியிடம் மனுமீது விசாரணை நடத்துமாறு கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: