புதுச்சேரி, ஏப். 25-
புதுச்சேரியில் ஆட்டோ பெர்மிட் வழங்குவதை உடனே நிறுத்த வேண்டும் என்று சிஐடியு வலியுறுத் தியுள்ளது.சிஐடியு புதுவை பிரதேச ஆட்டோ ஓட்டுநர்கள் மற் றும் உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு சங்கத்தின் பிரதேச துணை தலைவர் துளசிங்கம் தலைமை தாங்கினார்.சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.முருகன், சங்கத்தின் பொதுச்செயலாளர் சீனுவாசன் மற்றும் நிர்வாகிகள் லிங்கேசன்வேலு, மணவாளன், பக்கிரி,மதிவாணன்,நூர்முகமது,ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.சமீபத்தில் உயர்த்தியுள்ள இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் இருசக்கர மோட்டார் வாடகை நிலையங் களை தடை செய்ய வேண்டும், புதுச்சேரியில் 4,000த்திற்கும் அதிகமான ஆட்டோக்கள் இயங்கி வரும் நிலையில் சமீபத்தில் புதிதாக 700ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கியிருப்பது இத்தொழிலை மேலும் நலிவடைய செய்யும்.எனவே பெர்மிட் வழங்குவதை உடனே நிறுத்த வேண்டும், பெட்ரோல் மான்ய விலையில் வழங்க வேண்டும், மீட்டர் கட்டணத்தை தொழிற்சங்கங்களோடு கலந்து பேசி நிர்ணயிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.கோரிக்கைகளை வலியுறுத்தி மே 29ல் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவக்கடன் வழங்க ஓய்வூதியர் கோரிக்கை வேண்டு
ம்ஆரணி, ஏப். 25-
அரசு ஓய்வூதியர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி மூலம் மருத்துவக்கடன் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க ஆரணி வட்டக்கிளை மாநாடு மேற்குஆரணியில் நடைபெற்றது. வட்டக்கிளைத் தலைவர் ஏ.செல்வராஜ் தலைமை தாங் கினார். இக்கூட்டத்தில் செயலர் ஏ.விருஷபதாஸ், பொரு ளாளர் ஜி.ராமமூர்த்தி, துணைத்தலைவர் இ.என்.வெங்க டேசன், இணைசெயலர் திருவேங்கடம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆரணியில் இயங்கி வரும் தாலுக்கா அரசு மருத்து வமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், பாரத ஸ்டேட் வங்கியில் ஓய்வூதியர் களுக்கு மருத்துவ கடன் வங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்களை நிறைவேற்றினர்.

Leave A Reply