சென்னை, ஏப். 25- சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதி களால் கடத்தப்பட்ட சுக்மா மாவட்ட ஆட்சியரும் தமிழ கத்தைச் சேர்ந்த வருமான அலெக்ஸ் பால் மேனன் தந்தை வரதாஸ் தற்போது சென்னையில் உள்ளார். சென்னை கொளத்தூரில் உள்ள, மேன னின் மாமனார் வீட்டில் தங்கியுள்ள வரதாஸை, மார்க்சிஸ்ட் கட் சியின் மத்தியக் குழு உறுப்பினரும் நாடாளுமன்ற மாநிலங் களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் புதனன்று (ஏப். 25) சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ், வடசென்னை மாவட்டச் செயலாளர் எல், சுந்தரராஜன் சென்றிருந்தனர். உடன் திமுக மக்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவனும் சென்றார். பின்னர் டி.கே. ரங்கராஜன், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ஆட்சி யரை மீட்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தக் கேட்டுக்கொண்டார். அனைத்து வழிகளிலும் ஆட்சியரை மீட் பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சிதம்பரம் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: