திருவாரூர், ஏப். 25-அரசின் உத்தரவுகளை அமல்படுத்தாமலும் அங் கன்வாடி பெண் ஊழியர் களை இழிவுபடுத்தும் வகையிலும் நடந்துகொள் ளும் மாவட்ட திட்ட அலு வலர் மற்றும் புள்ளியியல் ஆய்வாளர் ஆகியோரின் அராஜக நடவடிக்கைகளை கண்டித்து தமிழ்நாடு அங் கன்வாடி ஊழியர்கள் மற் றும் உதவியாளர்கள் சங்க திருவாரூர் மாவட்ட கிளை யின் சார்பில் செவ்வாய்க் கிழமை மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வி.ரேவதி தலைமை வகித்தார்.
ஆர்ப் பாட்டத்தில் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் பி.புவனேஸ்வரி, மாவட்டச் செயலாளர் மா.அம்புஜம் காமராஜ் ஆகியோர் கண் டன உரையாற்றினர். சிஐ டியு மாவட்டச் செயலாளர் நா.பாலசுப்பிரமணியன், ஜி.பைரவநாதன், ஜி.புஷ்ப நாதன், தனபால், டி.முருகை யன் உள்ளிட்டோர் போராட்டத்தை ஆதரித்து பேசினர். மாவட்டப் பொரு ளாளர் ஏ.பிரேமா நன்றி கூறி னார். இந்த ஆர்ப்பாட்டத் தில் 500க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் கலந்து கொண்டு ஆவேச முழக்கங் களை எழுப்பினர். ஆர்ப் பாட்டத்தின் நிறைவாக சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் சி.நடராசனை சந் தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதனை பரி சீலித்து உரிய நடவடிக்கை களை உடன் எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி யளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: