சிதம்பரம், ஏப். 19-
சிதம்பரம் ரயில்வே குடி யிருப்பில் மக்கள் தினந் தோறும் உயிர் நீரான குடி நீருக்கே போராடி வருகி றார்கள் இதைக் கண்டு கொள்ளாத நகராட்சி மற் றும் ரயில்வே அதிகாரி களால் விரக்தியில் உள்ள மக்கள் நகராட்சி குடிநீர் வண்டியை மறித்துப் போராட தயாராகி வருகிறார்கள். முற்று கையிட்டு போராட்டம் நடத்த பொது மக்கள் ஆயத் தமாக உள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் 33வது வார்டில் சிதம்பரம் ரயில் நிலையம் அமைந்துள்ளது இங்கு 50க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பணியில் ஈடுபட் டுள்ளனர். முக்கிய பணியை உடனுக்குடன் கவனிப்பதற் காக சிதம்பரம் ரயில் நிலை யம் அருகே 30 தொழிலாளர் களுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் வீடு கட்டி கொடுக் கப்பட்டுள்ளது. இதில் ஒவ் வொரு குடும்பத்திலும் 5க்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிதம்பரம் நகராட்சியில் தான் ஓட்டு உரிமை உள் ளது. ஒவ்வொரு தேர்தல் நேரத்தில் இவர்கள் சிதம் பரம் மாலைக்கட்டி தெரு வில் உள்ள நகராட்சி நடு நிலைப்பள்ளி வாக்குச் சாவ டியில்தான் அவர்களது வாக்கைப் பதிவு செய்து வரு கின்றனர்.இந்நிலையில் கடந்த முறை மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் சிதம்பரம் நகர் மன்ற தலைவராக இருந்த பவுசியாபேகத்திடம் குடியிருப்புப் பகுதி யில் உள்ள பொதுமக்கள் மற் றும் அருகில் உள்ள இந் திரா நகர் பகுதி மக்கள் எங் கள் பகுதிக்கு குடிநீர் இல்லை, எனவே குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் கேட்டுக்கொண்டனர்.
அதன் அடிப்படையில் சிதம்பரம் இந்திராநகருக்கு தினமும் லாரி வண்டி மூலம் குடிநீர் கொண்டு செல்லப் படுகிறது. அதனுட னேயே ரயில்வே குடியிருப்பு மக்களுக்கும் குடிநீர் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் ரயில்வே குடியிருப்புப் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதன் அடிப்படையில் ரயில்வே குடியிருப்பு பகு திக்கு நகராட்சி ஊழியர்கள் குடிநீர் வழங்கி வந்தார்கள். இதனிடையே கடந்த ஆண்டு நகர மன்றத் தேர்த லில் அதிமுக தலைமையில் நிர்மலா நகர மன்றத் தலை வராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.அவர் பதவியேற்ற சில நாட்களில் ளசிதம்பரம் ரயில்வே குடியிருப்பு மக்க ளுக்கு குடிநீர் வண்டி மூலம் குடிநீர் கொடுத்து வரும் பணியை நகராட்சி அதிகாரி கள் நிறுத்தி விட்டனர். ரயில்வே குடியிருப்பை கடந்து அருகில் உள்ள இந் திரா நகருக்கு மட்டும் குடி நீர் கொடுத்து வருகின்றனர். குடி நீர் கிடைக்காமல் அவதி அடைந்த ரயில்வே குடியிருப்பு மக்கள் இந்திரா நகருக்கு குடிநீர் வரும் போது அங்கு போய் குடிநீர் பிடித்தால் அந்த பகுதி மக்களுக்கும் இவர்களுக்கும் பெருத்த சண்டை ஏற்படுகிறது.இதுகுறித்து நகராட்சி ஆணையர் பொறுப்பு மால தியிடம் கேட்ட போது “ரயில்வே குடியிருப்பு சிதம் பரம் நகராட்சி பகுதிக்கு உட்பட்டு உள்ளதா என்று பார்த்து விட்டு குடிநீர் கொடுக்கிறேன், பிறகு நீங்க ளும் குடிநீர் கொடுக்க மறுக் கும் நகராட்சி அதிகாரி என்று உங்கள் பத்திரிக் கையில் எழுதுங்கள்” என்று பதில் அளித்தார்.கடந்த சில நாட்களுக்கு முன் ரயில் நிலையத்தை ஆய்வு செய்ய வந்த திருச்சி கோட்ட ரயில்வே மேலா ளர் வைத்தியலிங்கத்திடம் கேட்ட போது எங்களுக்கு சிதம்பரம் நகராட்சிக்கு குடிநீர் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் உள்ளது, இது சம்பந்தமாக அதிகாரி களுடன் ஆலோசித்து நடவ டிக்கை எடுக்கிறேன் என் றார்.சிதம்பரம் நகராட்சி அதிகாரிகள் எல்லை பிரச் சனையை வளர்க்காமல் அந்தப் பகுதி மக்களுக்கு உயிர் நீரான குடிநீர் வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

Leave A Reply

%d bloggers like this: