கள்ளக்குறிச்சி, ஏப். 19-
விழுப்புரம் மாவட்டம் தியாக துருகம் ஒன்றியம் முடியனூரில் உழவர் பெருவிழா நடந்தது.ஒன்றிய சேர்மன் பச்சையம்மாள் வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர்கள், அய்யப்பா, ராமன் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குநர் ராமச்சந்திரன் வரவேற் றார். எம்எல்ஏ அழகுவேல் பாபு சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு பேசினார். விவசாயிகளுக்கு மகசூலை பெருக்கும் வழி முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. வேளாண்மைதுறைத் அதிகாரிகள் சந்திரசேகர், கங்காகௌரி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் சுசீலா, அதி முக ஒன்றியச் செயலாளர் வைத்தியலிங்கம், கிருஷ்ண மூர்த்தி, ஜான்பாஷா, பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுவை பின்கோ ஆலையை திறக்கக் கோரி முற்றுகை
புதுச்சேரி, ஏப்.19-
புதுச்சேரி திருபுவனையில் மூன்று மாதங்களாக மூடப் பட்டுள்ள கூட்டுறவு நூற்பாலையை (பின்கோ) உடனே திறக்க வேண்டும் எனக்கோரி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள மூன்று மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், தவறு செய் யும் அதிகாரிகள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.தட்டாஞ்சாவடியில் உள்ள கூட்டுறவுப் பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்றுகைப் போராட் டத்தில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் நிலவழ கன், பஞ்சாலை கழகச் செயலாளர் ஆவணியப்பன், ஐஎன்டியுசி தலைவர் பலராமன், பாப்புசாமி (ஏடியு), தனசேகரன் (தேமுதிக), ஆறுமும், பழனிராஜா, சாரங்க பாணி, கிருஷ்ணமூர்த்தி, சிவசங்கரன் உள்ளிட்ட 200க் கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக ஆலையை உடனே திறக்கக் கோரி முழக்கமிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: