ஓசூர், ஏப். 19-
தேசிய ஒருமைப்பாட்டு கலைபண்பாட்டுக்கழகம் மற்றும் தி பீக்ஸ் இதழ் இணைந்து நடத்திய 43 ஆம் ஆண்டு தேசிய ஒருமைப் பாடு நல்விழா சென் னையில் நடைபெற்றது.இவ்விழாவிற்கு பல் வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள், தங்கப்பதக்கம் வழங் கப்பட்டன. ஓசூர் விஜய் வித் யாலயா பள்ளி முதல்வரும், தமிழக அரசின் நல்லாசி ரியர் விருது பெற்றவருமான கி. சம்பத்குமார் தமிழகத் தின் நட்சத்திரம் என்ற விரு தையும், தங்கப்பதக்கத் தையும்பெற்றுள்ளார். நீதி யரசர் பொன். பாஸ்கரன் மற் றும் பழம் பெரும் நடிகர் வி.எஸ். ராகவன் ஆகியோர் விருதுகளை வழங்கினர். ஏற்கெனவே டாக்டர் சம்பத்குமார் வித்யாரத்னா விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.